Filter posts by category

அரசியல்

முன்னாள் பிரதி அமைச்சருக்கு கடூழிய சிறை : அதிரடி தீர்ப்பு அதிர்வில் இலங்கை அரசியல் களம்.

அபிவிருத்தி அதி லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றிய காலத்தில், அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவிற்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (09) இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, சிறைத்தண்டனையுடன் சேர்த்து அவருக்கு அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், […]

முன்னாள் பிரதி அமைச்சருக்கு கடூழிய சிறை : அதிரடி தீர்ப்பு அதிர்வில் இலங்கை அரசியல் களம். Read More »

மாகாண சபை தேர்தலுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்காக அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்டகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்கமைய, தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்ட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி, சட்ட ரீதியான சிக்கல்களைத் தீர்த்துக் கொண்டவுடன்

மாகாண சபை தேர்தலுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி! Read More »

இந்தியாவிற்கு இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விஜயம்

(2026 மே 10 முதல் 16 வரை) இலங்கையின் மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவைச் சேர்ந்த 19 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, இலங்கை மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் (திருமதி) சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில், 2026 மே 10 முதல் 16 வரை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டது. இந்த பிரதிநிதிகள் குழுவில் 15 பாராளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் உட்பட 4 அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.  இலங்கை மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள்

இந்தியாவிற்கு இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விஜயம் Read More »

தமிழகத்தில் புதிய அரசியல் சகாப்தம்: விஜய்யின் ‘த.வெ.க’ ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம் (TVK) ஆட்சியமைக்க, இந்திய தேசிய காங்கிரஸ் தனது முழுமையான ஆதரவை வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் (Girish Chodankar) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் காங்கிரஸ் தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், மதச்சார்பற்ற மற்றும் சமூக நலனை முன்னிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காக வழங்கிய தெளிவான மற்றும் வலுவான

தமிழகத்தில் புதிய அரசியல் சகாப்தம்: விஜய்யின் ‘த.வெ.க’ ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு! Read More »

மஞ்சள் துண்டை வெளியேற்றிய அதிகாரிகள்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு!

கோவை | மே 4, 2026 தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்

மஞ்சள் துண்டை வெளியேற்றிய அதிகாரிகள்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு! Read More »

தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினம்: மட்டக்களப்பில் மாபெரும் இரத்த தான நிகழ்வு*

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வா அவர்களின் 49 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பில் மாபெரும் இரத்த தான நிகழ்வொன்று இன்று (26) உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில், வந்தாறுமூலையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் காரியாலயத்தில் இந்த அறப்பணி இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான *இரா.சாணக்கியன், *ஞா.சிறிநேசன் மற்றும் வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினம்: மட்டக்களப்பில் மாபெரும் இரத்த தான நிகழ்வு* Read More »

whatsapp image 2026 04 03 at 21.50.15

எதிர்கட்சி காட்டுகின்ற பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை என – பிரபு எம்.பி. யின் கண்டுபிடிப்பு.

இந்த காலகட்டத்திலும்சரி கடந்த காலகட்டத்திலும்சரி இந்த நாட்டு மக்கள் எப்போதுமே எதிர்பார்க்கும் காலங்களிலும்சரி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் எதிர்கட்சி காட்டுகின்ற இந்த பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாதமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியிலுள்ள பல கிராமங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை(03.04.2026) விஜயம் செய்த அவர் களுதாவளையில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே

எதிர்கட்சி காட்டுகின்ற பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை என – பிரபு எம்.பி. யின் கண்டுபிடிப்பு. Read More »

whatsapp image 2026 04 03 at 21.29.16

பாலையடிவட்டையிலிருந்து இராணுவம் வெளியேற்றம் நேரடியாக சென்று பார்வையிட்ட மட்டு.எம்.பி

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவூபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இலங்கை இராணுவம் கையகப்படுத்தி முகாமிட்டிருந்து வந்து.இந்த இராணுவ முகாம அமைந்திருந்த காணியை விடுவிக்குமாறு இலங்கைத் தமிழரவுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் குரல் கொடுத்து வந்திருந்தனர்.இந்நிலையில் இந்த பொதுச்சந்தைக் கட்டடத் தொகுதியில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் தற்போது அவ்விடத்திலிருந்து வெளியேறி அக்காணியை விடுவித்துள்ளனர். அவ்விடத்தை நேற்றய தினம் வியாழக்கிழமை

பாலையடிவட்டையிலிருந்து இராணுவம் வெளியேற்றம் நேரடியாக சென்று பார்வையிட்ட மட்டு.எம்.பி Read More »

17741664676

“எரிபொருள் பிரச்சினையான நேரம் பாதையை மூடாதே!” – யாழில் பொதுமக்கள் வீதி மறியல் போராட்டம்; போக்குவரத்து நெரிசலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

யாழ்ப்பாணம் அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை ஊடான போக்குவரத்துப் பாதை திடீரென மூடப்பட்டதைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் நேற்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். மத்திய கிழக்குப் போர் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் இவ்வேளையில், பிரதான பாதைகளை மூடுவது பொதுமக்களின் அன்றாட வாழ்வை மேலும் சிதைப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர். (தொடர்ந்து வாசிக்க…) இந்தத் திடீர் போராட்டம் மற்றும் தற்போதைய நெருக்கடி குறித்த முக்கிய விபரங்கள் வருமாறு: “வேண்டும் வேண்டும் வீதி வேண்டும்”,

“எரிபொருள் பிரச்சினையான நேரம் பாதையை மூடாதே!” – யாழில் பொதுமக்கள் வீதி மறியல் போராட்டம்; போக்குவரத்து நெரிசலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! Read More »

chrome mvnwefgrtf

கத்தாரைத் தாக்கினால் ஈரானின் எரிவாயு களம் தரைமட்டமாக்கப்படும் – டொனால்ட் டிரம்ப்

ஈரானின் முக்கிய இயற்கை எரிவாயு களமானது சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு முன்கூட்டியே எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் தனது அண்டை நாடான கத்தார் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. சவுத் பார்ஸ் எரிவாயு களம் மீதான தாக்குதலில் அமெரிக்காவிற்குப் பங்கு இல்லை எனத் தெரிவித்துள்ள டிரம்ப், ஒருவேளை ஈரான்

கத்தாரைத் தாக்கினால் ஈரானின் எரிவாயு களம் தரைமட்டமாக்கப்படும் – டொனால்ட் டிரம்ப் Read More »