மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்காக அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்டகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்கமைய, தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்ட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி, சட்ட ரீதியான சிக்கல்களைத் தீர்த்துக் கொண்டவுடன் தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்கள் கோரும் பணிகள் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
Post Views: 138




