• Home
  • ›
  • அரசியல்
  • ›
  • தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினம்: மட்டக்களப்பில் மாபெரும் இரத்த தான நிகழ்வு*

தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினம்: மட்டக்களப்பில் மாபெரும் இரத்த தான நிகழ்வு*

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வா அவர்களின் 49 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பில் மாபெரும் இரத்த தான நிகழ்வொன்று இன்று (26) உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில், வந்தாறுமூலையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் காரியாலயத்தில் இந்த அறப்பணி இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான *இரா.சாணக்கியன், *ஞா.சிறிநேசன் மற்றும் வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும், மட்டக்களப்பு மாநகர முதல்வர், பல்வேறு பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், வாலிபர் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் பெருமளவிலான பொதுமக்களும் வருகை தந்து குருதி கொடையளித்தனர்.

தந்தை செல்வாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சமூகப் பொறுப்புணர்வுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி ஞானசார தேரர் விடயத்தில் கூறியது போன்று மைலத்தமடு மேச்சல்தரை பகுதியிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும்  2 ஆம் திகதி சத்வீக போராட்டத்திற்கும் அழைப்பு  – ஸ்ரீநேசன் எம்பி கோரிக்கை.