இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுப்போம்”: மருதமுனையில் சமூக நீதிக் கட்சியின் பொதுக் கூட்டம்
(பாறுக் ஷிஹான்) “இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” எனும் கருப்பொருளில் சமூக நீதிக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பொதுக் கூட்டமும், சமூகப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலும் நேற்று (16) மாலை மருதமுனை கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சமூக நீதிக் கட்சியின் தலைவரும், தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினருமான அர்க்கம் முனீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மருதமுனை இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில் தலைமை










