கொழும்பு, மட்டக்குளி – கந்தேஉட (ராஸ்ஸ மூனகந்த) பகுதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
வத்தளை பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்த மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post Views: 12




