admin

மண்முனை தென் எருவில்பற்று  செயலகத்தில் 9 வது தடiவாய நடைபெற்ற இரத்ததான நிகழ்வு.

vadivel shagthivel மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் இரத்ததான நிகழ்வு தொடர்ச்சியாக இவ்வருடமும்  9 வது தடவையாக நடைபெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன்   இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த இரத்ததான நிகழ்வானது  திங்கட்கிழமை(05.10.2026) பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரின் ஆலோசனை  மற்றும் வழிகாட்டுதலில், கணக்காளரும்   நலன்புரிச்சங்க தலைவருமான வ.நாகேஸ்வரனின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது மண்முனை தென் எருவிப்

மண்முனை தென் எருவில்பற்று  செயலகத்தில் 9 வது தடiவாய நடைபெற்ற இரத்ததான நிகழ்வு. Read More »

திருகோணமலையில் 48 பயனாளிகளுக்கு புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ எச்  உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” திட்டத்தின் கீழ் 5,000 வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் இன்று (05) நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் ஒரு கட்டமாக, திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்

திருகோணமலையில் 48 பயனாளிகளுக்கு புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு Read More »

யாழ்ப்பாணத்திலிருந்து மூதூர் வரை:

மூன்று சமூகங்களுக்கும் பொதுவான காணி கொள்கை தேவை – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் _கலீலூர் ரஹ்மான் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 187.56 ஏக்கர் காணியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள தீர்மானம், அரசாங்கத்தின் நல்லிணக்கப் பயணத்தில் மிகவும் சாதகமான நடவடிக்கை என்பதை நாம் முதலில் பாராட்ட வேண்டும். இது வெறுமனே ஒரு காணித்துண்டை விடுவிப்பது மட்டுமல்ல, பல தசாப்தங்களாக போரினால் இழந்த மக்களின் வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் கிராமங்களை

யாழ்ப்பாணத்திலிருந்து மூதூர் வரை: Read More »

கல்முனையில் “எமக்கான சமூக நீதி எழட்டும்” ஊடகவியலாளர் சந்திப்பு

பாறுக் ஷிஹான் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின் குரல்வளைகளை நசுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கல்முனையில் பல்வேறு துறை சார்ந்த பிரதிநிதிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்பியுள்ளனர். “எமக்கான சமூக நீதி எழட்டும்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கல்முனை மயோன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஆர். அமீர் தலைமையேற்று உரை நிகழ்த்தினார். கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி

கல்முனையில் “எமக்கான சமூக நீதி எழட்டும்” ஊடகவியலாளர் சந்திப்பு Read More »

நாட்டின் அரசியலமைப்புத் திருத்தங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குப் வரலாற்றுப் பங்கு உண்டு-ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்  பாறுக் ஷிஹான்

இலங்கையின் அரசியலமைப்புச் வரலாற்றில் கொண்டுவரப்பட்ட முற்போக்கான திருத்தங்களுக்குப் பின்னால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாரிய பங்கும் பங்களிப்பும் ஒளிந்துள்ளதாகக் கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாக உருவாக்கப்பட்டுள்ள ‘சட்டத்தரணிகள் அமைப்பின்’ அறிமுக நிகழ்வும் கலந்தரையாடலும் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மருதமுனை மூன் வில்லேஜ் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது விசேட உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அங்கு அவர் மேலும்

நாட்டின் அரசியலமைப்புத் திருத்தங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குப் வரலாற்றுப் பங்கு உண்டு-ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்  பாறுக் ஷிஹான் Read More »

கல்முனை தலைமையக பொலிஸாரின் வருடாந்த அணிவகுப்புப் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம் ஆண்டிற்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனை நிகழ்வும் கல்முனை உவெஸ்லி கல்லூரி மைதானத்தில் இன்று  நடைபெற்றது. கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எல். லசந்த களுஆராச்சி தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு

கல்முனை தலைமையக பொலிஸாரின் வருடாந்த அணிவகுப்புப் பரிசோதனை Read More »

மட்டக்களப்பு  திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

 (கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) மற்றும் போதைப்பொருள் விற்பனை இடம் பெற்று வருகிறது எனவே இதனை  இல்லாது ஒழித்து தருமாறு கோரி திராய்மடுவில் நேற்று சனிக்கிழமை (03 மாலை  ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு  ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டையடுத்து நேற்று மாலை 5.00 மணிக்கு  திராய்மடு வில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர் இதையடுத்து இந்த சட்டவிரோத மதுபான விற்பனையால்

மட்டக்களப்பு  திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் Read More »

முள்ளிப்பொத்தானை – கண்டி பிரதான வீதியில் வடிகால்களை அமைத்துத் தருமாறு கோரிக்கை

A.H.HASFAR HASFAR முள்ளிப்பொத்தானை – கண்டி பிரதான வீதியில் முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால், மழைக்காலங்களில் வெள்ளநீர் வீதியோர மக்களின் வீடுகளுக்குள் புகும் நிலை தொடர்ந்து காணப்படுகின்றது. குறிப்பாக, ஈச்சன் குளத்திலிருந்து வெளியேறும் நீர் செல்லும் பகுதிகளில் போதிய வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வடிகால் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முள்ளிப்பொத்தானை – கண்டி பிரதான வீதியில் தேவையான முக்கிய வடிகால்களை உடனடியாக

முள்ளிப்பொத்தானை – கண்டி பிரதான வீதியில் வடிகால்களை அமைத்துத் தருமாறு கோரிக்கை Read More »

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது

பாறுக் ஷிஹான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாகக் கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பு மிகக் குறுகிய காலத்திற்குள் உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டு, அதன் முதலாவது கட்டக் கலந்தரையாடலும் அறிமுக நிகழ்வும் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில்  மருதமுனை மூன் விலேச் ரெஸ்டுரெண்ட்  மண்டபத்தில் (3) நடைபெற்றது. குறுகிய கால அழைப்பினை ஏற்றுப் பெருமளவிலான சட்டத்தரணிகள், கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம், ஜனாதிபதி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது Read More »

நீதிமன்றப் பிடியாணை: தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் களுத்துறையில் வைத்துக் கைது!

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாகியிருந்த பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலேகொடஅத்தே ஞானசார தேரர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை – தீனியாவல பகுதியில் உள்ள ஆரண்ய சேனாசனத்தில் (அடவி மடத்தில்) மறைந்திருந்த நிலையிலேயே அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. கைதைத் தவிர்க்கும் நோக்கில் ஞானசார தேரர் தமது தொலைபேசி சிம் கார்ட் மற்றும் பயன்படுத்திய

நீதிமன்றப் பிடியாணை: தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் களுத்துறையில் வைத்துக் கைது! Read More »