• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • நீதிமன்றப் பிடியாணை: தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் களுத்துறையில் வைத்துக் கைது!

நீதிமன்றப் பிடியாணை: தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் களுத்துறையில் வைத்துக் கைது!

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாகியிருந்த பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலேகொடஅத்தே ஞானசார தேரர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை – தீனியாவல பகுதியில் உள்ள ஆரண்ய சேனாசனத்தில் (அடவி மடத்தில்) மறைந்திருந்த நிலையிலேயே அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

கைதைத் தவிர்க்கும் நோக்கில் ஞானசார தேரர் தமது தொலைபேசி சிம் கார்ட் மற்றும் பயன்படுத்திய வாகனங்களை மாற்றியிருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: