vadivel shagthivel
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் இரத்ததான நிகழ்வு தொடர்ச்சியாக இவ்வருடமும் 9 வது தடவையாக நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த இரத்ததான நிகழ்வானது திங்கட்கிழமை(05.10.2026) பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில், கணக்காளரும் நலன்புரிச்சங்க தலைவருமான வ.நாகேஸ்வரனின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மண்முனை தென் எருவிப் பற்று பிரதேசத்திலுள்ள விளையாட்டுகழகங்கள், இளைஞர் கழகங்கள், கிராமஅபிவிருத்தி சங்கங்கள், மாதர்கிராம அபிவிருத்திசங்கங்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் இந்த இரத்த தானநிகழ்வில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கியிருந்தனர்.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







