admin

ஐஸ் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் குழு காரைதீவில் மாட்டியது

கடற்குதிரை என பட்டப்பெயருடன் அழைக்கப்படும் சந்தேக நபர் பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக சூட்சுமமாக கடல் மற்றும் தரை வழியாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (09 )இரவு அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப்

ஐஸ் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் குழு காரைதீவில் மாட்டியது Read More »

மூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான திறந்த கலந்துரையாடல்

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், இணைந்து ஏற்பாடு செய்திருந்த சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளை அணுகல் எனும் கருப் பொருளின்கீழ் மக்களுடனான திறந்த கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (10.05.2026) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்டத் தலைவர் திருமதி இந்துமதி ஹரிகரதாமோதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து

மூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான திறந்த கலந்துரையாடல் Read More »

வீட்டுத் தோட்டத்தில் 6 அடி உயர கஞ்சா காடு: பிபிலையில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

வீட்டுத் தோட்டத்தில் காய்கறி பயிரிடுவதாகக் கூறி, சுமார் 6 அடி உயரத்திற்கு கஞ்சாச் செடிகளை வளர்த்து வந்த பாரிய சட்டவிரோத பயிர்ச்செய்கை ஒன்றினை பிபில பொலிஸார் முறியடித்துள்ளனர். பிபில, பிட்டகும்பர, ஹதேகனுவ பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த அதிரடிச் சோதனையின் போது, பொலிஸாரையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் செழித்து வளர்ந்திருந்த கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டுத் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா வளர்க்கப்படுவதாக பிபில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கே. ஜயலத் அவர்களுக்கு

வீட்டுத் தோட்டத்தில் 6 அடி உயர கஞ்சா காடு: பிபிலையில் அதிரடிச் சுற்றிவளைப்பு! Read More »

அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தலைமைத் தேரர் கைது: சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அதிரடி நடவடிக்கை!

இலங்கையின் புனிதத்தலங்களில் ஒன்றான அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் (எட்டு புனிதத் தலங்கள்) மகாநாயக்க தேரர் பல்லேகம ஹேமரத்ன தேரர், சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று (09) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: 15 வயதுடைய சிறுமி ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த தேரர் மீது கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை முன்னெடுத்த

அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தலைமைத் தேரர் கைது: சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அதிரடி நடவடிக்கை! Read More »

உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம் சம்மாந்துறையில் இடம்பெற்ற பாரிய இரத்த தான முகாம்!

.சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் கடும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், “உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் பாரிய இரத்த தான முகாம் ஒன்று நேற்று (09) சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. அம்பாறை மாவட்ட உயிர் காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மனிதாபிமானப் பணி, சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட அனர்த்த

உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம் சம்மாந்துறையில் இடம்பெற்ற பாரிய இரத்த தான முகாம்! Read More »

தாய்லாந்திலிருந்து சொக்லேட் வடிவில் கடத்தி வரப்பட்ட 4 கோடி பெறுமதியான ஹஷீஷ்: கட்டுநாயக்கவில் 24 வயது இளைஞன் கைது

சொக்லேட் பொதிகளுக்குள் மறைத்து சுமார் 4 கோடியே 77 இலட்சம் ரூபா பெறுமதியான ‘ஹஷீஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் சிக்கியுள்ளார். கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், இன்று அதிகாலை 12.30 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக்

தாய்லாந்திலிருந்து சொக்லேட் வடிவில் கடத்தி வரப்பட்ட 4 கோடி பெறுமதியான ஹஷீஷ்: கட்டுநாயக்கவில் 24 வயது இளைஞன் கைது Read More »

காத்தான்குடி அக்பர் பள்ளிவாயல் மகளிருக்கான மார்க்கச் சட்ட விளக்க வகுப்பு: சான்றிதழ் வழங்கி வைப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி-06, A.L.S மாவத்தை அக்பர் பள்ளிவாயல் மஹல்லா மகளிருக்காக நடாத்தப்பட்ட 15 நாட்கள் கொண்ட “மார்க்கச் சட்ட விளக்க வகுப்பு” வெற்றிகரமாக நிறைவுபெற்று, அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. அக்பர் பள்ளிவாயல் நிர்வாக சபை மற்றும் ஜாமிஅதுல் ஜமாலியா அரபுக் கல்லூரி உஸ்தாதுமார்களின் விஷேட பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட இவ்வகுப்புகள், பள்ளிவாயலின் பேஷ் இமாம் மௌலவி A.L.M. சஜாத் (பலாஹி) அவர்களின் நெறிப்படுத்தலில் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டிருந்தது. இம்மார்க்க விளக்க வகுப்புகள்

காத்தான்குடி அக்பர் பள்ளிவாயல் மகளிருக்கான மார்க்கச் சட்ட விளக்க வகுப்பு: சான்றிதழ் வழங்கி வைப்பு Read More »

மட்டக்களப்பு உறுகாமத்தில் யானை அட்டகாசம்: குடியிருப்புக்குள் புகுந்து உணவுப் பொருட்களை நாசம் செய்த யானை.

மட்டக்களப்பு, உறுகாமம் பகுதியில் இன்று இரவு புகுந்த காட்டுயானை ஒன்று குடியிருப்பின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.உள்ளே உறங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். வீட்டில் இருந்த உணவுப் பொருட்கள் மற்றும் பெறுமதியான தளபாடங்களை யானை சேதப்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான யானை ஊடுருவலால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மட்டக்களப்பு உறுகாமத்தில் யானை அட்டகாசம்: குடியிருப்புக்குள் புகுந்து உணவுப் பொருட்களை நாசம் செய்த யானை. Read More »