admin

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அம்பாறையிலும் ஆரம்பம்

பாறுக் ஷிஹான் தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்  செவ்வாய்க்கிழமை(12)  அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது. அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட   உறவினர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு    திருக்கோவில் தம்பிலுவில் பொது சந்தைக்கு முன்பாக  முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது. அங்கு கஞ்சி காய்ச்சி முன்னால் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் வைத்து வழிபட்டு பின்னர் மக்களுக்கு மே 18 என எழுதப்பட்ட சிரட்டை யில்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அம்பாறையிலும் ஆரம்பம் Read More »

மட்டு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பித்து வைப்பு—

(கனகராஜா சரவணன்) தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, ‘தமிழின அழிப்பு நாள்’ நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலையில்  கொட்டும் மழைக்கு மத்தியில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தூபிக்கு முன்னால் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி கஞ்சி வார்த்தை ஆரம்பித்து வைத்தனர். கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்த்தை  உணர்வு பூர்வமாகஆரம்பித்து வைத்தார். இதன் போது மழையையும்

மட்டு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பித்து வைப்பு— Read More »

வாழைச்சேனை வயலுக்கு சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு

(கனகராஜா சரவணன்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை வயல் பகுதிக்கு சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் உயிரிழந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வாகனேரி குளத்துமடுவைச் சேர்ந்த 46 வயதுடைய செல்லத்துரை கோபால் என்ற விவசாயியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விவசாயி மழை பெய்து வரும் நிலையில் வயலுக்கு சென்றவர் நேரமாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடிய போது கால்வாயில் சடலமாக கிடப்பதை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தினர். சம்பவ

வாழைச்சேனை வயலுக்கு சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு Read More »

வாழைச்சேனை சூடுபத்தினசேனையில் குப்பை கொட்டும் இடத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு– 

  (கனகராஜா சரவணன்) வாழைச்சேனை சூடுபத்தினசேனை பகுதியில் கழிவுகள் கொட்டும் இடத்தில்  யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த  நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலையில் இடம்பெற்ள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சூடுபத்தினசேனை பகுதியில் உள்ள கழிவு கொட்டும்  இடத்திற்கு வழமையாக குப்பைகளை கொட்டச் சென்ற பிரதேச சபை ஊழியர்கள், யானை ஒன்று அசைய முடியாத நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, வன ஜீவராசிகள்

வாழைச்சேனை சூடுபத்தினசேனையில் குப்பை கொட்டும் இடத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு–  Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் ஆரம்பமான நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வு

பாறுக் ஷிஹான் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, நாவிதன்வெளி பிரதேச சபையில் புதன்கிழமை(13) உணர்வுப்பூர்வமான நினைவேந்தல் மௌன அஞ்சலியுடன் நிகழ்த்தப்பட்டது. ​நாவிதன்வெளி பிரதேச சபையின் 11-வது மாதாந்த அமர்வு தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் காலை 9:30 மணியளவில் சபா மண்டபத்தில் நடைபெற்றது. ​மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, அங்கு உயிரிழந்த உறவுகளுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. ​கூட்டத்தின் போது சபை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் ஆரம்பமான நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வு Read More »

மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு—-

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் பெய்துவரும் மழையினால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான வீதி வெள்ள நீரினால் உடைந்ததையடுத்து  அவ்வீதியின் ஊடான போக்குவரத்து இன்று செவ்வாய்க்கிழமை (12) முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. மண்டூர் கூமாவடிப் பாலம் தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகனப் போக்குவரத்திற்காகப் பாலத்திற்கு அருகாமையில் தற்காலிக வீதி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக,

மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு—- Read More »

காத்தான்குடியில் பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

(கனகராஜா சரவணன்) ) போக்குவரத்து பொலிசாரினால் வழங்கப்படும்  தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த குற்றச்சாட்டில்  யாழ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இன்று செவ்வாய்கிழமை (11) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கடந்த 4ம் திகதி மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிசார்  மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஒருவரை நிறுத்தி வேணங்களை சோதனையிட்டனர் இதன்போது கைது

காத்தான்குடியில் பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது Read More »

சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளை அணுகல்” எனும் கருப்பொருளின்கீழ் மக்களுடனான திறந்த கலந்துரையாடல்

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், இணைந்து ஏற்பாடு செய்திருந்த “சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளை அணுகல்” எனும் கருப்பொருளின்கீழ் மக்களுடனான திறந்த கலந்துரையாடல் நேற்று விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்டத் தலைவர் திருமதி இந்துமதி ஹரிகரதாமோதரன் தலைமையில் மட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை,

சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளை அணுகல்” எனும் கருப்பொருளின்கீழ் மக்களுடனான திறந்த கலந்துரையாடல் Read More »

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்

பாறுக் ஷிஹான் கடற்பரப்பில் தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி இன்று எதிர்ப்பு தெரிவித்து  சாய்ந்தமருது பகுதி மீனவர்கள்  படகுகளுடன் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறிய கொள்ளை நடவடிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பொராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். சாய்ந்தமருது பிரதான கடற்கரை வீதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது  பல மீன்பிடி படகுகள் வீதிக்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்து ஒரு காலப்பகுதிக்கு

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம் Read More »

ஒலுவில் அஷ்ரப் நகரில் பாரிய கூட்டுச் சிரமதானம்: உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து கழிவு முகாமைத்துவப் பணி

பாறுக் ஷிஹான் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் திண்மக்கழிவு நிலநிரப்பு நிலையத்தை சீர்செய்யும் நோக்கில், பல உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்த பாரிய விசேட வேலைத்திட்டம் இன்று  முன்னெடுக்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ்  தலைமையில், பிராந்தியத்தின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் இந்தச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. ஒன்றிணைந்த உள்ளூராட்சி மன்றங்கள் இந்த விசேட வேலைத்திட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையுடன் இணைந்து சம்மாந்துறை பிரதேச சபை,நாவிதன்வெளி பிரதேச சபை,நிந்தவூர் பிரதேச

ஒலுவில் அஷ்ரப் நகரில் பாரிய கூட்டுச் சிரமதானம்: உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து கழிவு முகாமைத்துவப் பணி Read More »