யாழில் சித்த மருத்துவத் துறை விரிவுரையாளர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை உறுதி!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறை பெண் விரிவுரையாளர் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இக்கொலை தொடர்பான திடுக்கிடும் பின்னணித் தகவல்களும் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட விரிவுரையாளரின் மகன் அண்மையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்தே இக்கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முறைப்பாட்டையடுத்து, விரிவுரையாளரின் பாசையூரிலுள்ள (பாண்டியன்தாழ்வு) வீட்டிற்குச் சென்ற பொலிஸார் அங்கு அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது வீட்டின்










