admin

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது-சம்மாந்துறையில் சம்பவம்

கசிப்புடன்  கைதான  பெண் சந்தேக நபரிடம் விசாரணை முன்னெடுப்பு சம்மாந்துறையில் 33 லீற்றர் கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான  வீரமுனை 03 பகுதியில் செவ்வாய்க்கிழமை  (19)  மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது  தன்வசம் வைத்திருந்த 33 ஆயிரம் மில்லி  லீற்றர் கசிப்புடன் 40 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில்  சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி  என்.

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது-சம்மாந்துறையில் சம்பவம் Read More »

பருத்தித்துறையில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: சினிமா பாணியில் துரத்திப் பிடித்த நெல்லியடி பொலிஸார்!

பருத்தித்துறை பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய இரு கொள்ளையர்களை, பொலிஸார் சினிமா பாணியில் துரத்தி மடக்கிப் பிடித்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை பகுதியில் பெண் ஒருவர் சென்றுகொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென அவரது ஒரு பவுண் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர். எனினும், சாமர்த்தியமாகச் செயற்பட்ட அங்கிருந்த பொதுமக்கள், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளின் இலக்கத்தைக் குறித்துக்கொண்டு

பருத்தித்துறையில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: சினிமா பாணியில் துரத்திப் பிடித்த நெல்லியடி பொலிஸார்! Read More »

ரடம ஏகட திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: பதாவி ஸ்ரீ புராவில் மாகாண ஆளுநர் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து போதைப்பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய திட்டமான “ரடம ஏகட (நாடே ஒன்றாக) திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தின் பதாவி ஸ்ரீ புரா நகரில் பாரிய பொது விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கை 18-05-2026 முன்னெடுக்கப்பட்டது கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை காவல்துறையினரின் முழுமையான பங்களிப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் இத்திட்டம் நாடளாவிய

ரடம ஏகட திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: பதாவி ஸ்ரீ புராவில் மாகாண ஆளுநர் தலைமையில் ஆரம்பம்! Read More »

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று பிரதேச கிளையின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் , கஞ்சி வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் கதிரவெளியில் நடைபெற்றது

கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அரிசியை வைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி அவர்களது பசியைப் போக்கியிருந்தனர். இந்நிலையில் அப்போதைய சூழ்ந்நிலையில் அங்கிருந்த மக்கள் கஞ்சி காய்ச்சி அருந்தியதை நினைவு கூர்ந்து வருடந்தோறும் இக்காலப்பகுமியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கும் நிகழ்வுகள் வடகிழக்கில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் (18.05.2026) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. . இதன்போது அங்கிருந்த மக்கள் விருப்புடன்

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று பிரதேச கிளையின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் , கஞ்சி வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் கதிரவெளியில் நடைபெற்றது Read More »

அம்பாறையில் முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஆரம்பம்!

அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று நேற்று திங்கட்கிழமை (18) அம்பாறை பிரதான பேருந்து நிலையத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல ரத்நாயக்க, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மேலும், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி,

அம்பாறையில் முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஆரம்பம்! Read More »

மாணவர் பாராளுமன்ற நடைமுறைப் பயிற்சிக்காக ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்ற காலி சௌவுத்லண்ட் கல்லூரி மாணவிகள்!

காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் (Galle Southlands College) மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் (14) மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கமல் ஆரியசிங்ஹ ஆகியோரின் தலைமையில் இந்த ஆரம்ப அமர்வு இடம்பெற்றது. காலி சௌவுத்லண்ட் கல்லூரி மாணவிகளுக்கு பாராளுமன்றத்தின் கட்டமைப்பு, சட்டதிட்டங்கள் மற்றும் அதன் நாளாந்த செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறை

மாணவர் பாராளுமன்ற நடைமுறைப் பயிற்சிக்காக ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்ற காலி சௌவுத்லண்ட் கல்லூரி மாணவிகள்! Read More »

பொலிஸாரின் பிடியில் தப்பிய பின்னர் சுடப்பட்டு பிடிபட்ட சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

பாறுக் ஷிஹான் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய பின்னர் சுடப்பட்டு கைதான சந்தேக நபர் தொடர்பில் அம்பாறை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து திங்கட்கிழமை (18) அதிகாலை பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய சந்தேக நபர் பின்னர் பொலிஸாரினால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையில் கடும் பாதுகாப்பில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சந்தேக நபர் அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியான கொட்டவேஹெரா கிராமத்தில் சட்டவிரோத

பொலிஸாரின் பிடியில் தப்பிய பின்னர் சுடப்பட்டு பிடிபட்ட சந்தேக நபர் தொடர்பில் விசாரணை Read More »

கிழக்கில்  ‘முழு நாடும் ஒன்றாக’ ஸ்டிக்கர் ஒட்டும் விழிப்புணர்வு மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு–

(கனகராஜா சரவணன்) ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயல் திட்டத்தில் கிழக்கில் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தி விழப்புணர்வு செயற்பாடு இன்று திங்கட்கிழமை (18) மட்டக்களப்பு காந்தி பூங்காலில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ்; நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு மற்றும் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆரம்பித்து வைத்தனர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நாடளாவிய ரீதியில்

கிழக்கில்  ‘முழு நாடும் ஒன்றாக’ ஸ்டிக்கர் ஒட்டும் விழிப்புணர்வு மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு– Read More »

மட்டு மாசகர சபையில் சேவையை பெறச் சென்ற மக்களை திருப்பி அனுப்பியது காட்டுச் சட்டமா? ஈ.பி.டிபி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்;குமார்-

(கனகராஜா சரவணன்) மட்டு மாநகர சபையில் சேவையை பெறச் சென்ற மக்களை நூலக திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி  வருகிறார் அதன் பின்னர் வருமாறு தெரிவித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.; மாநகர சபை இந்த முடிவை எவ்வாறு எடுத்தது? சபையை கூட்டியா? அல்லது காட்டுச் சட்டமா?  தனிநபர் எடுத்த முடிவா? அவரின் நற்பெயரை கெடுப்பதற்காக? என ஈ.பி.டிபி. கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்;குமார் கேள்வி எழுப்பியுள்ளார் மட்டு பாலைமீன்மடுவில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

மட்டு மாசகர சபையில் சேவையை பெறச் சென்ற மக்களை திருப்பி அனுப்பியது காட்டுச் சட்டமா? ஈ.பி.டிபி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்;குமார்- Read More »

மட்டு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பு உணர்வு பூர்வமாக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

(கனகராஜா சரவணன்) முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பின் 17 வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் திங்கட்கிழமை (18) நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு முள்ளிவாய்க காலில் காலை 10.10 க்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தும் அதே நேரத்தில் பொது சுடர் ஏற்றி மலர் தூவி உயிர்

மட்டு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பு உணர்வு பூர்வமாக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். Read More »