வல்வெட்டித்துறையில் 1 கோடியே 15 லட்சம் கொள்ளை: புகைக்கூட்டை உடைத்து கைவரிசை காட்டிய 16, 19 வயது சிறுவர்கள் கைது – நெடுங்கேணியில் புதைக்கப்பட்ட பணம் மீட்பு!
வல்வெட்டித்துறை, கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் புகுந்து, ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்களான இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த மே மாதம் 27ஆம் திகதி பகல் வேளையில், குறித்த வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திய கொள்ளையர்கள், வீட்டின் புகைக்கூட்டை (புகைபோக்கி) உடைத்து உள்ளே இறங்கியுள்ளனர். வீட்டின் உரிமையாளர்களால் வல்வெட்டித்துறை










