புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா கோலாகலம்!
மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை 7.00 மணியளவில் பக்திப்பூர்வமாக நடைபெற்றது. பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் ஏ.பீ.எம்.றஜாயி தலைமையில் நடைபெற்ற இந்நிழழ்வில், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இணைந்து புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர். நிகழ்வின் ஆரம்பத்தில், காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான்










