வயிற்றுக்குள் விழுங்கிய ‘ஐஸ்’ போதைப்பொருள் பாக்கெட் வெடித்ததில் பேருந்து சாரதி பரிதாப உயிரிழப்பு!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து சாரதியாகப் பணியாற்றிய 55 வயதுடைய நபர் ஒருவர், கடத்தலுக்காக வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்த ‘ஐஸ்’ (Methamphetamine) போதைப்பொருள் பாக்கெட் வெடித்ததில் நஞ்சூட்டப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஓகவெல பகுதியைச் சேர்ந்த, தங்காலை – மாகும்புர வழித்தட சொகுசு பேருந்தின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். திடீர் உடல்நலக்குறைவு கடந்த திங்கள்கிழமை (08) வழக்கம்போல் பேருந்தைச் செலுத்திவிட்டு, அது தனது இலக்கை அடைந்த சிறிது நேரத்திலேயே குறித்த சாரதிக்கு திடீரென கடுமையான










