admin

இலங்கைக்கு ‘எல்-நினோ’ பேராபத்து: ஜூலை, ஆகஸ்டில் கடுமையான வறட்சி நிலவும் என எச்சரிக்கை!

பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் அடுத்த மாதம் உருவாகவுள்ள ‘எல்-நினோ’ (El-Nino) காலநிலை மாற்றம், இம்முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த உலகளாவிய காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவாக, இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் கடுமையான வறட்சி, கடுமையான வெப்ப அலைகள் மற்றும் கடுமையான உணவுப் பற்றாக்குறை போன்ற பாரிய சவால்களை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொருளாதார

இலங்கைக்கு ‘எல்-நினோ’ பேராபத்து: ஜூலை, ஆகஸ்டில் கடுமையான வறட்சி நிலவும் என எச்சரிக்கை! Read More »

மண்சரிவு அபாய எச்சரிக்கை: நுவரெலியா, கண்டி உட்பட 4 மாவட்ட மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக 04 முக்கிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை (மஞ்சள்) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, பின்வரும் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பிரதேச செயலக பிரிவுகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன: முக்கிய குறிப்பு: மேலதிக விபரங்கள் மற்றும் அவசர உதவிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அல்லது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர அழைப்பு இலக்கமான 117

மண்சரிவு அபாய எச்சரிக்கை: நுவரெலியா, கண்டி உட்பட 4 மாவட்ட மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்! Read More »

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்று (12) அதிகாலை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால், விமானம் மீண்டும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கே (BIA) திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக விமான நிலையப் பணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UL-606 என்ற விமானமே சிட்னிக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை சுமார் 1:00 மணியளவில் புறப்பட்டது.

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்! Read More »

அம்பாறை மாவட்டத்தில் நீண்ட கொடைக்கு பின்னர் கன மழை , சுழல் காற்று, மின்னல் வெட்டு , கடல் கொந்தளிப்பு

அம்பாறை மாவட்டத்தில் நீண்ட  தொடர்  கோடை வெப்பத்தின் பின்னர் திடீர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் சுழல்  காற்று, மின்னல் வெட்டு , கடல் கொந்தளிப்பு என்பனவும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. மேலும் இன்று(11) மாலை  பல்வேறு இடங்களில் குறித்த  மழை காரணமாக மரங்கள் உடைந்துள்ளதுடன் பலத்த காற்று காரணமாக சிறு  சேதங்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை,அக்கரைப்பற்று,நிந்தவூர்,காரைதீவு,மாவடிப்பள்ளி ,சாய்ந்தமருது,பாண்டிருப்பு,கல்முனை ,நாவிதன்வெளி,மருதமுனை,பெரியநீலாவணை ,மல்வத்தை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில்  மூழ்கிக் காணப்படுகின்ற

அம்பாறை மாவட்டத்தில் நீண்ட கொடைக்கு பின்னர் கன மழை , சுழல் காற்று, மின்னல் வெட்டு , கடல் கொந்தளிப்பு Read More »

இந்த அரசாங்கத்தில் கிழக்கு மாகாண நிருவாகம் மிகவும் பலவீனமடைந்துள்ளது. 

– இம்ரான் எம்.பி  ஹஸ்பர் ஏ.எச்- வினைத்திறனற்ற நியமனங்களால்  இந்த அரசாங்கத்தில் கிழக்கு மாகாண நிருவாகம் மிகவும் பலவீனமடைந்துள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (11) கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  கிழக்கு மாகாணசபை நிருவாகம் மிகவும் பலவீனமடைந்துள்ளதால் அதன் இணையத்தளம் எந்தவிதமான இற்றைப்படுத்தலுமின்றி இருக்கின்றது. இதனால் பொதுக்களால் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்கள தொடர்புகளில்

இந்த அரசாங்கத்தில் கிழக்கு மாகாண நிருவாகம் மிகவும் பலவீனமடைந்துள்ளது.  Read More »

கிழக்கு மாகாண நிலப் பிரச்சினை தொடர்பிலான தீர்வு தொடர்பில் உயர்ஸ்தானிகர் இடத்தில் முன்வைப்பு

சுவிஸ்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் அவுஸ்திரேலியா  நாட்டின்  இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்  ஆகியோர் கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ  விஜயத்தினை இந்த வாரம் மேற்கொண்டு இருந்தனர். இவ்  இராஜ தந்திரிகள்  கிழக்கு மாகாணத்திலுள்ள உயர் அரச அதிகாரிகள், சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களை சந்தித்து இருந்தனர். இந்த சந்திப்பின்  போது  அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பின் சார்பில் இவ்வமைபப்பின் பணிப்பாளர் கண்டுமணி லவகுசராசா, பிரதிப் பணிப்பாளர்  அழகுராசன்  மதன் ஆகியோரையும் நேற்றைய தினம் (10.06.2026) 

கிழக்கு மாகாண நிலப் பிரச்சினை தொடர்பிலான தீர்வு தொடர்பில் உயர்ஸ்தானிகர் இடத்தில் முன்வைப்பு Read More »

600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு   36 வருடம் நிறைவு குறித்த  ஞாபகார்த்த நிகழ்வு

பாறுக் ஷிஹான்- தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600  பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்கும் முகமாக நிகழ்வு  வியாழக்கிழமை(11)  அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த  நினைவு தூபியில் நடைபெற்றது. 1990 ஜூன் 11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 காவல்துறை அதிகாரிகளின் நினைவாக  அமைதி என்ற பெயரில் இம்மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அம்பாறை பிரதேச  பதில்  உதவி பொலிஸ் அத்தியட்சகர்  நுவன் தந்தநாராயண  அம்பாறை

600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு   36 வருடம் நிறைவு குறித்த  ஞாபகார்த்த நிகழ்வு Read More »

அக்கரைப்பற்றில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுப் பேரணியும் கலை நிகழ்வுகளும்: மாநகர சபைக்கு பாராட்டு!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்வுகள் மிகச் சிறப்பான முறையிலும் உற்சாகமாகவும் அண்மையில் நடாத்தப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிவழ்வுகளில், அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த பெருமளவான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, மாணவர்களின் பங்கேற்புடன் கூடிய விழிப்புணர்வு ஊர்வலங்களும், சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வீதி நாடகங்களும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அரங்கேற்றப்பட்டன. சுற்றுச்சூழல் தின

அக்கரைப்பற்றில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுப் பேரணியும் கலை நிகழ்வுகளும்: மாநகர சபைக்கு பாராட்டு! Read More »

சுவிட்சர்லாந்து உயர்ஸ்தானிகர் கிழக்கு ஆளுநர் சந்திப்பு

இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் Siri Walt அவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும்  இடையிலான சந்திப்பு இன்று (11) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள், சுற்றுலாத்துறை, மீன்வளத்துறை மற்றும் விவசாயத்துறையின் மேம்பாடு தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், கிழக்கு மாகாணத்தில் நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை

சுவிட்சர்லாந்து உயர்ஸ்தானிகர் கிழக்கு ஆளுநர் சந்திப்பு Read More »

சுற்றாடல் தினம் அனுஷ்டிப்பும் மரநடுகையும்

சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மரநடுகை நிகழ்வு (10) இடம் பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் க.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சிரமதான நிகழ்வும் இடம் பெற்றது.இதில் சுற்றுப்புறச் சூழல் சக உத்தியோகத்தர்களால் இணைந்து சுத்தம் செய்யப்பட்டது.

சுற்றாடல் தினம் அனுஷ்டிப்பும் மரநடுகையும் Read More »