admin

பொத்துவில் சுகாதார அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தாய் சேய் நலனை மேம்படுத்த அதிரடித் தீர்மானங்கள்!

பொத்துவில் பிரதேச மக்களின் சுகாதார நலனை மேம்படுத்துவது மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள சவால்களுக்கு நடைமுறைத் தீர்வுகளைக் காண்பது குறித்த முக்கிய மாநாடு (Monthly Conference) பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் உவைஸ் பாறூக் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இம்மாநாட்டில் பிராந்திய சுகாதாரத்துறையின் முக்கிய உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு

பொத்துவில் சுகாதார அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தாய் சேய் நலனை மேம்படுத்த அதிரடித் தீர்மானங்கள்! Read More »

முன்னறிவிக்கப்பட்டபடி உரிய தினங்களில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும்: கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் (O/L) மற்றும் உயர்தரப் (A/L) பரீட்சைகள், முன்னதாக அறிவிக்கப்பட்ட கால அட்டவணையின்படி எவ்வித மாற்றமுமின்றி உரியத் தினங்களில் நடைபெறும் எனக் கல்வி அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதற்கமைய, பரீட்சைகளுக்கான பாடத்திட்டங்களை முழுமையாகக் கற்பித்து மாணவர்களைத் தயார்ப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கைகளைப் பாடசாலைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் நிலவும் பாடசாலைகள், மேலதிக நேரங்களை (Extra

முன்னறிவிக்கப்பட்டபடி உரிய தினங்களில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும்: கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு! Read More »

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பில்பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்

 (கனகராஜா சரவணன்)  கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு; வெள்ளிக்கிழமை (12) மிகச் சிறப்பான முறையில் பக்திப் பெருக்குடன் நடைபெற்ற இந்த தீ மிதிப்பு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 07) கதவு திறத்தலுடன் பக்திபூர்வமாக ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சம் தொடர்ந்து இடம்பெற்று வந்ததுடன் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு மாலையில் விசேட

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பில்பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர் Read More »

மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்

 ( கனகராஜா சரவணன்) அம்பாறையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல் அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் வியாழக்கிழமை (11) படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூந்து சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் சிவயோகன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், மட்டு மாநகர சபை முன்னாள் முதல்வர் ரி.சரவணபவன், அமெரிக்க மிஷன் தேவாலய போதகர் மற்றும்

மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல் Read More »

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

பாறுக் ஷிஹான் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் ஆரம்பித்துள்ளது. இதற்கமைய சிறைக் கூடத்தில்

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம் Read More »

ஆர்ப்பாட்டங்கள் கொடி பிடித்தல் அறிக்கை அரசியலும் தமிழர்களுக்கு ஒரு தீர்வையும் தராது– மட்டு மாநகர சபையின் முன்னாள்  முதல்வர் ரி.சரவணபவான்–

(கனகராஜா சரவணன்) ஜே.பி தமிழ் மக்களின் போராட்டத்தை சிதைத்த ஒரு கட்சி ஆகவே ஆர்ப்பாட்டங்கள் கொடி பிடித்தல் அறிக்கை அரசியலும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வையும் தராது என்பதுடன் பலருக்கு தமிழ் தேசியம் ஒரு பிழைப்பு எனவே பிழைப்பு அரசியலுக்கு நாங்கள் வரக்கூடாது சரியான கொள்கையுடன் பயனிக்க வேண்டும் எங்கள் மக்களின் இன விடுதலைக்காக, சரியான முறையில் நாங்கள் செயல்படவேண்டும். என மட்டு மாநகர சபையின் முன்னாள்  முதல்வர் ரி.சரவணபவன் தெரிவித்தார் தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது

ஆர்ப்பாட்டங்கள் கொடி பிடித்தல் அறிக்கை அரசியலும் தமிழர்களுக்கு ஒரு தீர்வையும் தராது– மட்டு மாநகர சபையின் முன்னாள்  முதல்வர் ரி.சரவணபவான்– Read More »

ரத்மலானையில் ரூ. 5 கோடி பெறுமதியான ஹஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கொழும்பு ரத்மலானை பகுதியில் சுமார் 5 கோடி ரூபாய் சந்தை மதிப்புடைய ‘ஹஷ்’ (Hashish) போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த நபர் பிடிபட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 3 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய ஹஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பின்னால் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்

ரத்மலானையில் ரூ. 5 கோடி பெறுமதியான ஹஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது! Read More »

புதிய உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டம் அமுல்: TIN இலக்கம் கட்டாயம்; ஐடி வல்லுநர்கள், யூடியூபர்களுக்கு 5% வரி வலயத்திற்குள் புதிய கட்டுப்பாடு!

நாட்டின் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும், வரி செலுத்துவோரின் இணக்கத்தன்மையை மேம்படுத்துவதற்குமாக பல அதிரடி மாற்றங்களுடன் கூடிய 2026 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டம் கடந்த ஜூன் 3 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக அமுலுக்கு வந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் வரி விதிப்பு மற்றும் வரிச் சலுகைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மாதத்திற்கு 100,000 ரூபாவிற்கு மேற்பட்ட சேவைக் கொடுப்பனவுகளுக்கான 5

புதிய உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டம் அமுல்: TIN இலக்கம் கட்டாயம்; ஐடி வல்லுநர்கள், யூடியூபர்களுக்கு 5% வரி வலயத்திற்குள் புதிய கட்டுப்பாடு! Read More »

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் 3.2 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் இன்று (12) காலை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா ஆண்கள் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காக்காமுனையைப் பிறப்பிடமாகவும், முனைச்சேனைப் பிரதேசத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவராவார். நடுத்தீவில் சிக்கிய ஆசிரியர்: கிண்ணியா, நடுத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக சிவில் பாதுகாப்பு குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று காலை திடீர் சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே குறித்த ஆசிரியர் போதைப்பொருளுடன் கைகலப்புமாக சிக்கியுள்ளார். அவரிடமிருந்து

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் 3.2 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் இன்று (12) காலை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். Read More »

கல்முனை பொதுச் சந்தையில் விசேட தூய்மையாக்கல்: மாநகர ஆணையாளரின் அதிரடி நடவடிக்கை!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முக்கிய வர்த்தக மையமான பொதுச் சந்தைத் தொகுதியை முழுமையாக தூய்மைப்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று நேற்று (11) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக இவ்வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. பொதுச் சந்தையில் நீண்டகாலமாக நிலவி வரும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் நேரடி வழிகாட்டலில்,

கல்முனை பொதுச் சந்தையில் விசேட தூய்மையாக்கல்: மாநகர ஆணையாளரின் அதிரடி நடவடிக்கை! Read More »