• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மலேசியாவில் அதிரடி காட்டிய இலங்கை மாணவர்கள்! சர்வதேச அபாகஸ் போட்டியில் வாரிக்குவித்த பதக்கங்கள்!

மலேசியாவில் அதிரடி காட்டிய இலங்கை மாணவர்கள்! சர்வதேச அபாகஸ் போட்டியில் வாரிக்குவித்த பதக்கங்கள்!

மலேசியாவின் ஜென்டிங் ஹைலாண்ட்ஸில் (Genting Highlands) அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற சர்வதேச அபாகஸ் மனக்கணிதப் போட்டியில் (Genting International Abacus Mental Arithmetic Competition 2026) இலங்கை மாணவர்கள் பங்கேற்று, உலக அரங்கில் இலங்கையின் நாமத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் பல நாடுகளைச் சேர்ந்த 2,500 க்கும் மேற்பட்ட அதிதிறமைசாலிகளான மாணவர்கள் பங்கேற்ற இந்த சவால்மிக்க சர்வதேச போட்டிக்களத்தில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ‘ICAM ABACUS’ நிறுவனத்தின் 38 தகுதிவாய்ந்த மாணவர்கள் களமிறங்கியிருந்தனர்.

கடும் போட்டி நிலவிய இந்த சர்வதேச மேடையில், தங்களின் அபாரமான மனக்கணிதத் திறமையை வெளிப்படுத்திய ICAM மாணவர்கள், பல்வேறு பிரிவுகளின் கீழ் சர்வதேச மட்டத்திலான வெற்றிகளைத் தட்டிப்பறித்து சாதனை படைத்துள்ளனர்.

பதக்கங்களை அள்ளிய விபரம்:

இலங்கைத் திருநாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், நமது மாணவர்கள் அள்ளிக்கொண்டு வந்த சர்வதேச விருதுகளின் விபரம் வருமாறு:

  • முதலாம் இடங்கள் (Champions): 14
  • இரண்டாம் இடங்கள்: 17
  • மூன்றாம் இடங்கள்: 24
  • நான்காம் இடங்கள்: 10
  • ஐந்தாம் இடங்கள்: 11

மனக்கணித மற்றும் அபாகஸ் கல்வித்துறையில் இலங்கை மாணவர்களின் ஆற்றல் எத்தகையது என்பதை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இந்த வரலாற்றுச் சாதனை அமைந்துள்ளது.

சர்வதேச அரங்கில் தாய்நாட்டிற்கு பெருமை தேடித்தந்த இந்த மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்திய பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் கல்விச் சமூகத்தினரும் பொதுமக்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, “எமது மாணவர்களின் இந்த உலகளாவிய சாதனை எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. எதிர்காலத்திலும் எமது நாட்டு மாணவர்களை சர்வதேச தரத்திலான போட்டிகளுக்குத் தயார்படுத்தி, இன்னும் பல புதிய சாதனைகளைப் படைப்பதற்கான தொடர் முயற்சிகளை முன்னெடுப்போம்” என ICAM ABACUS நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

Share the Post: