அக்கரைப்பற்றில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுப் பேரணியும் கலை நிகழ்வுகளும்: மாநகர சபைக்கு பாராட்டு!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்வுகள் மிகச் சிறப்பான முறையிலும் உற்சாகமாகவும் அண்மையில் நடாத்தப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிவழ்வுகளில், அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த பெருமளவான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, மாணவர்களின் பங்கேற்புடன் கூடிய விழிப்புணர்வு ஊர்வலங்களும், சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வீதி நாடகங்களும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அரங்கேற்றப்பட்டன. சுற்றுச்சூழல் தின










