உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் புதிய அதிபர் பதவியேற்பு..!

(ஹஸ்பர் ஏ.எச்

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் புதிய அதிபராக  சோமசுந்தரம் கங்கேஸ்வரன் (SLPS-I) அவர்கள் புதன்கிழமை ( 09.09.2026 ) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார்.

இவர் முன்னதாக குப்புறுப்பிட்டி மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபராகவும், குச்சவெளி கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

கடந்த ஒரு வருட காலமாக கல்லூரியின் பதில் அதிபராகக் கடமையாற்றிய திருமதி. தமிழரசி விஷ்ணுக்குமார் அவர்களிடமிருந்து புதிய அதிபர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 அவருடைய அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி, கல்லூரி சமூகத்தினரால் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் கல்லூரி சமூகத்தின் முழுமையான பங்கேற்புடன் நடைபெற்ற இப்பதவியேற்பு நிகழ்வு சிறப்பாகவும் பாராட்டத்தக்க வகையிலும் அமைந்தது.

 இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், கோட்டக் கல்விப் பணிப்பாளர், முன்னாள் அதிபர்கள், பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

புதிய அதிபரின் தலைமையின் கீழ் கல்லூரியின் கல்வி, ஒழுக்கம் மற்றும் நிர்வாகத் துறைகள் மேலும் சிறப்பான முன்னேற்றத்தை அடையும் என கல்லூரி சமூகத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share the Post: