September 10, 2026

 COFI37 அமர்வில் இலங்கையின் மீன்வளக் கொள்கை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய முன்மொழிவுகள்

vadivel shagthivel ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைமையகத்தில் நடைபெற்று வரும் மீன்வளக் குழுவின் 37ஆவது அமர்வில் (COFI37), இலங்கை தனது தேசிய மீன்வளக் கொள்கை முன்னுரிமைகள், கடல் வளங்களின் நிலையான முகாமைத்துவம், சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய மீன்வள ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடைபெறும் இந்த முக்கிய சர்வதேச அமர்வில், உலக மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பின் நிலைமை தொடர்பான SOFIA 2026 அறிக்கை, சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடியை கட்டுப்படுத்துதல், காலநிலை மாற்றத்திற்கான தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள், சிறிய அளவிலான மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கு ஆதரவு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படுகின்றன. இந்த அமர்வில் இலங்கையின் சார்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச கலந்துகொண்டு, இலங்கையின் மீன்வளத்துறையின் தற்போதைய நிலை, இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இலங்கையின் நிலைப்பாடுகளையும் முக்கிய கருத்துக்களையும் முன்வைத்தார். அத்துடன், வங்காள விரிகுடா அரசுகளுக்கிடையேயான அமைப்பான BOBP-IGO-வின் தலைமைப் பொறுப்பிலும் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவுகள் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுக்கிடையிலான பிராந்திய மீன்வள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன்

 COFI37 அமர்வில் இலங்கையின் மீன்வளக் கொள்கை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய முன்மொழிவுகள் Read More »

உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் புதிய அதிபர் பதவியேற்பு..!

(ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் புதிய அதிபராக  சோமசுந்தரம் கங்கேஸ்வரன் (SLPS-I) அவர்கள் புதன்கிழமை ( 09.09.2026 ) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார். இவர் முன்னதாக குப்புறுப்பிட்டி மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபராகவும், குச்சவெளி கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். கடந்த ஒரு வருட காலமாக கல்லூரியின் பதில் அதிபராகக் கடமையாற்றிய திருமதி. தமிழரசி விஷ்ணுக்குமார் அவர்களிடமிருந்து புதிய அதிபர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அவருடைய அர்ப்பணிப்பான சேவையைப்

உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் புதிய அதிபர் பதவியேற்பு..! Read More »