கொழும்பு பொறளை மகசின் சிறைச்சாலையில் இரவு (06) ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு சிறைச்சாலையின் ‘E’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று திடீரென வன்முறையில் ஈடுபட்டதையடுத்து, அங்கு அமைதியற்ற சூழல் உருவானது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அமைச்சர் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.


Post Views: 21




