• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • ஜப்பான் தூதரக அதிகாரிகளின் திருகோணமலைக்கு கள விஜயம்…. அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு 

ஜப்பான் தூதரக அதிகாரிகளின் திருகோணமலைக்கு கள விஜயம்…. அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு 

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், அவர்களின் அனுசரணையுடனும் ஒருங்கிணைப்புடனும் ஜப்பான் தூதரகத்தில் இடம்பெற்ற ஆக்கபூர்வமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, தி/இறக்கக்கண்டி அல் ஹம்ரா பாடசாலைக்கு ஜப்பான் தூதரக அதிகாரிகள் 22 செப்டெம்பர் 2026 அன்று கள விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது, தூதரக அதிகாரிகள் பாடசாலை வளாகத்தை பார்வையிட்டதுடன், வகுப்பறைகளின் தற்போதைய நிலைமை, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்  இம்ரான் மஹரூப் MP  இனால் முன்வைக்கப்பட்டுள்ள தேவைகள் தொடர்பிலும் நேரடியாக அவதானித்து அறிந்து கொண்டனர்.

இவ்விஜயத்தில்  இம்ரான் மஹரூப், MP அவர்களின் சார்பில் அவரது பிரத்தியேக செயலாளர் சாதாத் கரீம், மக்கள் சேவை மன்றத்தின் நிறுவன பணிப்பாளர் எம்.ரீ.எம். பாரீஸ், பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர்  ஏ.எல்.எம்.நௌபர், பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் & உறுப்பினர்கள்  , பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிமனை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 கோரிக்கைகளை அன்புடன் பரிசீலித்து, நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு பாடசாலையின் தேவைகளை அவதானித்த ஜப்பான் தூதரக அதிகாரிகளுக்கு  மனமார்ந்த நன்றிகளையும் ஆழ்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

கல்வியின் வளர்ச்சிக்கும்  மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் வழங்கப்படும் இத்தகைய அக்கறையும் ஒத்துழைப்பும் தொடர்ந்தும் வலுப்பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது 

Share the Post: