• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் சுமுகமாக முடிவு: கலாச்சார ஆடையுடன் கடமைக்குத் திரும்பினர் கனிஷ்ட ஊழியர்கள்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் சுமுகமாக முடிவு: கலாச்சார ஆடையுடன் கடமைக்குத் திரும்பினர் கனிஷ்ட ஊழியர்கள்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற பெண் கனிஷ்ட சுகாதாரப் பணி உதவியாளர்களின் சீருடை தொடர்பான பிரச்சினை சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குறித்த பணியாளர்கள் தமது கலாச்சார நடைமுறைகளைப் பேணி ஆடையணிந்து மீண்டும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பன்மைத்துவ அடையாளங்களைக் கொண்ட ஒரு நாட்டில், அனைவரது சமய, கலாச்சாரத் தனித்துவங்களையும் பண்பாட்டு அம்சங்களையும் மதித்து இடமளிப்பதே அமைதியான முறையில் நாடு ஒன்றிணைந்து முன்னேற வழிவகுக்கும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நாம் சந்தித்த அனுபவங்களிலிருந்தும் கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்தும் இன்னும் படிப்பினைகளைப் பெறாத இலங்கையர்களாகவே தொடர்ந்தும் வாழ்வோமேயானால், அது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலையாகவே அமையும்.

எனவே, இலங்கையின் பல்லின, பல்சமய மற்றும் பல்கலாச்சாரப் பண்புகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு, ஒருவருக்கொருவர் மதிப்பளித்து ‘இலங்கையர்’ என்ற ஒற்றை அடையாளத்துடன் இணைந்து முன்னேறுவதே இன்றைய காலகட்டத்தின் அவசிய தேவையாகும்.

Share the Post: