October 24, 2026

மருதமுனையில் தேசிய சமூக வலுவூட்டல் விழிப்புணர்வு நிகழ்வு

பாறுக் ஷிஹான் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ‘தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம்’ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு, மருதமுனை 1 மற்றும் 2 ஆம் பிரிவுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்காக அண்மையில் (22) மருதமுனை சமுர்த்தி வங்கியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ. அன்வர் கலந்துகொண்டு, தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் அதனால் பொதுமக்கள் அடையும் நன்மைகள் குறித்தும் விரிவான விழிப்பூட்டல் உரையினை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வில் சமுர்த்தித் திட்ட முகாமையாளர் எஸ்.எல்.

மருதமுனையில் தேசிய சமூக வலுவூட்டல் விழிப்புணர்வு நிகழ்வு Read More »

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மீண்டும் பழைய மாணவர் சங்கம்: நவம்பர் 01 இல் விசேட கூட்டம்!

sihanfarook கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மீண்டும் பழைய மாணவர் சங்கம்: நவம்பர் 01 இல் விசேட கூட்டம்! கல்வி, ஒழுக்கம் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்தப் பழைய மாணவர்களுக்கு அன்பான அழைப்பு 1869 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், நீண்டகாலமாகச் செயற்பாடற்று இருந்த பழைய மாணவர் சங்கத்தை  மீண்டும் ஸ்தாபிப்பதற்கான விசேட கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம்

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மீண்டும் பழைய மாணவர் சங்கம்: நவம்பர் 01 இல் விசேட கூட்டம்! Read More »

தொடர் கனமழையால் முள்ளிப்பொத்தானை ஜாமியா நகர் நீரில் மூழ்கியது – மேலதிக நீரை வெளியேற்றும் பணிகள் ஆரம்பம்

A.H.HASFAR HASFAR திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை ஜாமியா நகர் பகுதியில் கடந்த இரு நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதி நீரில் மூழ்கியுள்ளது. தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளநீர் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேங்கியுள்ள மேலதிக நீரை வெளியேற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தம்பலகாமம் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவியுடன் பெகோ இயந்திரம் மற்றும் மனித ஆளணியை கொண்டு குறித்த நடவடிக்கைகள் நேற்று (23)மாலை முன்னெடுக்க பட்டன்.  பகுதியில்

தொடர் கனமழையால் முள்ளிப்பொத்தானை ஜாமியா நகர் நீரில் மூழ்கியது – மேலதிக நீரை வெளியேற்றும் பணிகள் ஆரம்பம் Read More »

உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை சேகப்பற்று வயல் நிலத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானைக்கு வனவிலங்கு வைத்தியக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் பலனளிக்கவில்லை. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் இரண்டு நாட்களாக நோய்வாய்ப்பட்டு கிடந்த காட்டு யானை தீவிர மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் இன்று (24) சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுத்து

உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு Read More »

கிழக்கு பல்கலைக்கழகத்தில்  3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு   ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபராதம் 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள்  பூட்டுமாறு நீதிமன்றம் உத்தரவு–

(கனகராஜா சரவணன்) கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து  1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா  தண்டப்பணமாக செலுத்துமாறும் 2 சிறு;றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் தற்காலிகமாக  பூட்டு மாறு ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டு கட்டளை பிறப்பித்தார் குறித்த சிற்றுண்டிசாலைகளை செங்கலடி சுகாதார அதிகாரிகள் பணிமனை பொதுச் சுகாதார

கிழக்கு பல்கலைக்கழகத்தில்  3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு   ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபராதம் 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள்  பூட்டுமாறு நீதிமன்றம் உத்தரவு– Read More »

தம்பலகாமம் – கண்டி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை

A.H.HASFAR HASFAR திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் – கண்டி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.தம்பலகாமம் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் காணப்படுவதனையே இப் படம் எடுத்து காட்டுகிறது. திருகோணமலை கண்டி பிரதான வீதியில் மாடுகள் கட்டுப்பாடின்றி நடமாடுவதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன், வீதி விபத்துகள் நிகழும் அபாயமும் காணப்படுகின்றது. குறிப்பாக, வேகமாகப் பயணிக்கும் வாகனங்கள் இம்மாடுகளால் விபத்துகளைச் சந்திக்கக்கூடிய நிலை உள்ளதாகப்

தம்பலகாமம் – கண்டி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை Read More »

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2026/10/ 23 ஆம் நாளான நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை

ஹஸ்பர் ஏ எச் மாண்புமிகு அவைத்தலைவர்  அவர்களே, இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள  வெறிநாய்க்கடி ஒழிப்பு மற்றும் நாய்கள் பதிவுச் சட்ட மூலத்தின்  (Elimination of Rabies and Registration of Dogs Bill)  இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் எனது கருத்துகளை எடுத்துரைக்க விழைகின்றேன். வெறிநாய்க்கடி ஒழிப்பு மற்றும் நாய்கள் பதிவு தொடர்பான இலங்கையின் இன்றையச் சட்டக் கட்டமைப்பானது காலனித்துவக் காலத்தைச் சேர்ந்ததாகும். 1893ஆம் ஆண்டின் வெறிநாய்க்கடி கட்டளைச் சட்டமும், 1901 ஆம் ஆண்டின் நாய்கள் பதிவுச்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2026/10/ 23 ஆம் நாளான நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை Read More »

2027ஆம் ஆண்டுக்கான வாழ்க்கைத் தொழில் பயிற்சிக்கு மாற்றுத்திறனாளிகளை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில்

ஹஸ்பர் ஏ எச்  சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்க்கைத் தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு, 2027ஆம் ஆண்டுக்கான பயிற்சிகளில் மாற்றுத்திறனாளி பயிலுனர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வு (23.10.2026) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ ஜி எம் ஹேமந்த குமார தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட சமூக சேவைகள் திணைக்களம் மூலமான பயிற்சி சிறந்ததாகும் எனவும் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளின் திறமைகளையும் ஆற்றல்களையும்

2027ஆம் ஆண்டுக்கான வாழ்க்கைத் தொழில் பயிற்சிக்கு மாற்றுத்திறனாளிகளை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் Read More »

இலங்கையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை உருவாக்குதல் ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் மற்றும் டயலாக் ஆக்சியாட்டா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து–

(கனகராஜா சரவணன்) ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் மற்றும் டயலாக் ஆக்சியாட்டா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னிலையில்,   வியாழக்கிழமை 22 கையெழுத்திட்டனர். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், சர்வதேச ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இலங்கைத் தொழில் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் நோக்கில், ஒத்துழைப்பிற்கான ஒரு கட்டமைப்பை நிறுவுகிறது. இந்தப் பங்களிப்பு, புத்தாக்கம் மற்றும் அடைகாத்தல், பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக ஆய்வகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மனிதனை மையமாகக்

இலங்கையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை உருவாக்குதல் ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் மற்றும் டயலாக் ஆக்சியாட்டா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து– Read More »

ஆலையடிவேம்பு விவசாயியின் மூன்று ஏக்கர் நெற்செய்கை இரசாயனக் கலவை தெளித்து நாசம் -பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாகத் பொலிசாரிடம் முறைப்பாடு

வி.சுகிர்தகுமார்       ஆலையடிவேம்பு விவசாயியின் மூன்று ஏக்கர் நெற்செய்கை இரசாயனக் கலவை தெளித்து நாசம் செய்யப்பட்டதுடன் அதற்குள் இருந்த பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாகத் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆலையடிவேம்பு பகுதியைச் சேர்ந்த யுளுP. வேனடி எனும் விவசாயியின் வயலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் அவரது நெற்பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவர் பெரும் கவலையடைந்துள்ளார்.ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம், ஆணைப்பாம்வெளி பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமானதென தெரிவிக்கப்படும் சுமார் மூன்று ஏக்கர் நெற்செய்கையே இனந்தெரியாத

ஆலையடிவேம்பு விவசாயியின் மூன்று ஏக்கர் நெற்செய்கை இரசாயனக் கலவை தெளித்து நாசம் -பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாகத் பொலிசாரிடம் முறைப்பாடு Read More »