• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • ஆலையடிவேம்பு விவசாயியின் மூன்று ஏக்கர் நெற்செய்கை இரசாயனக் கலவை தெளித்து நாசம் -பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாகத் பொலிசாரிடம் முறைப்பாடு

ஆலையடிவேம்பு விவசாயியின் மூன்று ஏக்கர் நெற்செய்கை இரசாயனக் கலவை தெளித்து நாசம் -பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாகத் பொலிசாரிடம் முறைப்பாடு

வி.சுகிர்தகுமார்     

 ஆலையடிவேம்பு விவசாயியின் மூன்று ஏக்கர் நெற்செய்கை இரசாயனக் கலவை தெளித்து நாசம் செய்யப்பட்டதுடன் அதற்குள் இருந்த பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாகத் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு பகுதியைச் சேர்ந்த யுளுP. வேனடி எனும் விவசாயியின் வயலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் அவரது நெற்பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அவர் பெரும் கவலையடைந்துள்ளார்.ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம், ஆணைப்பாம்வெளி பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமானதென தெரிவிக்கப்படும் சுமார் மூன்று ஏக்கர் நெற்செய்கையே இனந்தெரியாத நபர்களால் இரசாயனக் கலவை தெளிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட விவசாயி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இதனையடுத்து, நேற்றைய தினம் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், வயலைப் பார்வையிட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இதேநேரம் குறித்த பகுதியில் இனந்தெரியாத நபர்களால் மண் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான தடயங்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த வயல் காணியில் அமைந்துள்ள மாமரம் ஒன்றின் கீழ் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. இந்நிலையில், அந்தப் பிள்ளையார் சிலையும் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share the Post: