• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • தம்பலகாமம் – கண்டி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை

தம்பலகாமம் – கண்டி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை

A.H.HASFAR HASFAR

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் – கண்டி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.தம்பலகாமம் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் காணப்படுவதனையே இப் படம் எடுத்து காட்டுகிறது.

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் மாடுகள் கட்டுப்பாடின்றி நடமாடுவதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன், வீதி விபத்துகள் நிகழும் அபாயமும் காணப்படுகின்றது. குறிப்பாக, வேகமாகப் பயணிக்கும் வாகனங்கள் இம்மாடுகளால் விபத்துகளைச் சந்திக்கக்கூடிய நிலை உள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது மழை காலமாகையால் குறித்த பகுதியில் இவ்வாறான நிலமைகளை கட்டுப்படுத்துவது உரிய அதிகாரிகளின் கடமையல்லவா?

எனவே, இவ்விடயம் தொடர்பில் தம்பலகாமம் பிரதேச சபை உரிய கவனம் செலுத்தி, கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் வாகனப் பயணிகளின் உயிரைப் பாதுகாக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share the Post: