July 29, 2026

மட்டு. மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அறநெறி மாணவர்களுக்கான நேர்மை வார நிகழ்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடை பெற்ற ஆக்கப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (29.07.2026) நடைபெற்றது மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்டுரை, சித்திரம் வரைதல் ஆகிய போட்டிகளில் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களில் வெற்றி பெற்ற […]

மட்டு. மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அறநெறி மாணவர்களுக்கான நேர்மை வார நிகழ்வு Read More »

களுவாஞ்சிகுடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் வைத்து பொலிசாரால் கண்டு பிடிப்பு.

களுவாஞ்சிகுடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை குதியில் வைத்து கண்டு பொலிசாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் புதன்கிழமை(29.07.2026) தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது… மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் வைக்கிள் கடந்த 2026.07.22 அன்று களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து காணாமல் போயுள்ளது. இவ்விடையம் தொடர்பில் குறித்த நபர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தார். இச்சம்பவம் தொடர்பில் பொலிசார்

களுவாஞ்சிகுடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் வைத்து பொலிசாரால் கண்டு பிடிப்பு. Read More »

வடக்கு–கிழக்கு போர் பாதிப்பு: அடுத்த 2 ஆண்டுகளில் 13,000 வீடுகள் கட்டப்படும் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போரினால் வீடுகளை இழந்த மக்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 13,000 வீடுகள் வழங்கும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். காலி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற காலி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். செய்தியின் முக்கிய அம்சங்கள்: போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்

வடக்கு–கிழக்கு போர் பாதிப்பு: அடுத்த 2 ஆண்டுகளில் 13,000 வீடுகள் கட்டப்படும் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவிப்பு Read More »

மாத்தறை, காலி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் (கடை) ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மாத்தறை, காலி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மாத்தறை, காலி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் (கடை) ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Read More »

மட்டக்களப்பு, தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இறுதி வலுவூட்டல் செயலமர்வு இன்று 29.07.2026 வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

​தாயக ஊற்று அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் நெறிப்படுத்தலில் இச்செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது. ​மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர்பற்று கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த சுமார் 350 மாணவர்கள் இச் செயலமர்வில் கலந்துகொண்டு பயனடைந்தனர். எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதையும், பரீட்சை எதிர்கொள்ளும் நம்பிக்கையை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ​​நிகழ்வின் தொடக்கத்தில் அதிதிகள் வரவேற்பு, மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கம் ஆகியவை

மட்டக்களப்பு, தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இறுதி வலுவூட்டல் செயலமர்வு இன்று 29.07.2026 வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. Read More »

வவுனியாவில் சோகம்: கப் வாகனம் மோதி முதியவர் பலி; தப்பியோடிய சாரதிக்கு பொலிஸார் வலை!

வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய கப் ரக (Cab) வாகனம் நிற்காமல் தப்பியோடியுள்ளது. இச்சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கப் ரக வாகனத்தையும், அதன் சாரதியையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்காக தீவிர தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சோகம்: கப் வாகனம் மோதி முதியவர் பலி; தப்பியோடிய சாரதிக்கு பொலிஸார் வலை! Read More »

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலய அலங்கார உற்சவம்: கிராம வலம் மற்றும் காவடித் திருவிழா கோலாகலமாக ஆரம்பம்!

வவுனியா, சிதம்பரபுரம் அருள்மிகு ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது. இவ் உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளான கிராம உலா (கிராம வலம்) மற்றும் காவடித் திருவிழா என்பன இன்று (29.07.2026) மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகின. இதில் திரளான அடியார்கள் கலந்து கொண்டு எம்பெருமானை வழிபட்டு நற்பேறுகளைப் பெற்றனர்.

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலய அலங்கார உற்சவம்: கிராம வலம் மற்றும் காவடித் திருவிழா கோலாகலமாக ஆரம்பம்! Read More »

தாயிப் நகர் – கோவிலடி பிரதான வீதி (வெட்டாத்துப்பாலம் வீதி) புனரமைப்புப் பணிகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு கோரிக்கை

கிண்ணியா நிருபர்  தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட தாயிப் நகரிலிருந்து கோவிலடிக்குச் செல்லும் பிரதான வீதியான வெட்டாத்துப்பாலம் வீதியின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டன. எனினும், இன்று வரை (29.07.2026) அப்பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படாமல் காணப்படுகின்றன. இதன் காரணமாக  பொதுமக்கள் தினந்தோறும் பல்வேறு சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முள்ளிப்பொத்தானை, மீரா நகர், சிராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கிண்ணியா நகருக்குச் செல்வதற்கு அதிகளவில் இந்த வீதியையே பயன்படுத்தி வருகின்றனர்.

தாயிப் நகர் – கோவிலடி பிரதான வீதி (வெட்டாத்துப்பாலம் வீதி) புனரமைப்புப் பணிகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு கோரிக்கை Read More »

கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் திண்மக்கழிவுகள் கொட்டுவதால் துர்நாற்றம்.

மூதூர் கிழக்கு ஒருங்கிணைந்த கிராம மட்ட அமைப்புக்கள் மூதூர் பிரதேச சபை தவிசாளரிடம் முறைப்பாடு ..! கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதனால் இந்த இடத்தினூடாகப் பிரயாணம் செய்யும் பொது மக்கள் சுகாதார ரீதியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது என மூதூர் கிழக்கு ஒருங்கிணைந்த கிராம மட்ட அமைப்புக்கள் மூதூர் பிரதேச சபை தவிசாளரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பிட்ட கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது

கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் திண்மக்கழிவுகள் கொட்டுவதால் துர்நாற்றம். Read More »

தாந்தாமலை முருகன் ஆலய மகோற்சவத்தில் எம்பிக்கள் சிறிநாத், சிறிநேசன் வழிபாடு: ஆலய அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடல்!

வரலாற்றுச் சிறப்புமிக்க தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயச் செயலாளரும் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினருமான திரு.செ.ஸ்ரீதரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மற்றும் ஆலய நிர்வாகிகளின் அழைப்பின் பேரில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் மற்றும் ஞானமுத்து சிறிநேசன் ஆகியோர் 28.07.2026 இன்றைய தினம் குறித்த ஆலயத்திற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். ​ஆலயத்தில் தற்போது இடம்பெற்று வரும் வருடாந்த மகோற்சவ பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்டு

தாந்தாமலை முருகன் ஆலய மகோற்சவத்தில் எம்பிக்கள் சிறிநாத், சிறிநேசன் வழிபாடு: ஆலய அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடல்! Read More »