வரலாற்றுச் சிறப்புமிக்க தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயச் செயலாளரும் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினருமான திரு.செ.ஸ்ரீதரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மற்றும் ஆலய நிர்வாகிகளின் அழைப்பின் பேரில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் மற்றும் ஞானமுத்து சிறிநேசன் ஆகியோர் 28.07.2026 இன்றைய தினம் குறித்த ஆலயத்திற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
ஆலயத்தில் தற்போது இடம்பெற்று வரும் வருடாந்த மகோற்சவ பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்டு இறை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஆலயத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்பில் ஆலய நிர்வாகிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
இவ் விஜயத்தின் போது, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபைத் தவிசாளர் இளையதம்பி திரேசகுமாரன், மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினரும் ஆலயச் செயலாளருமான திரு.செ.ஸ்ரீதரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான திரு.த.பிரபாகரன், திரு.கா.நாகேந்திரன், திரு.நா.கஜேந்திரன், ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ பத்ம நிலோஜ ஈசான சிவம், ஆலயத் தலைவர் திரு.இ.தட்சணாமூர்த்தி, பொருளாளர் தா.ஜெயராம், ஆலய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.








