களுவாஞ்சிகுடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை குதியில் வைத்து கண்டு பொலிசாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் புதன்கிழமை(29.07.2026) தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் வைக்கிள் கடந்த 2026.07.22 அன்று களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து காணாமல் போயுள்ளது. இவ்விடையம் தொடர்பில் குறித்த நபர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் நாலாபாகமும் தகவல் தெரிவித்திருந்த நிலையில் செவ்வாய்கிழமை(28.07.2026) குறித்த மோட்டார் சைக்கிளையும் அதனைக் களவாடிச் சென்றதாகக் கருதப்படும் சந்தேக நபரையும் பாணமை பகுதியில் வைத்து பாணமை பொலிசாருடன் இணைந்து கைது செய்யப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 25 வயது மத்திக்கத்தக்கவர் எனவும், மோட்டார்சைக்கிளின் பெறுமதி சுமார் எட்டு இலட்சத்தது தொண்ணூராயிரத்துக்கு மேல் எனவும் பொலிசார் தெரிவித்தனர்
2026.07.22 அன்று களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து குறித்த நபர் மிகவும் சூட்சுமமான முறையில் குறித்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்று இலக்கத் தகட்டையும் மாற்றிவிட்டு கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தீப்த்திகுமாரவின் வழிநடாத்தலின்கீழ், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுபாஸ் ஆரியரெத்னவின் வழிகாட்டுதலில், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஜே.பி.ஜோய், அவர்களின் தலைமையிலான பொலிஸ் குருவினர் இந்நடிவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் போலி இலக்கத்தகடு உள்ளிட்ட சான்றுப் பொருட்களையும் நீதி மன்றில் முன்னிலைப் படுத்தியுள்ளதாகவும், பொதுமக்கள் தமது வாகனங்களை நிறுத்தும்போது சரியான முறையில் முறையில் பூட்டி, மோட்டார் சைக்கிள் கென்ரின் பூட்டு செய்து பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், கள்வர்கள் நடமாடுவதானால் அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிசார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.




