நேர்மை வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடை பெற்ற ஆக்கப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (29.07.2026) நடைபெற்றது
மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்டுரை, சித்திரம் வரைதல் ஆகிய போட்டிகளில் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து செயற்படும் 35 இந்கும் மேற்பட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இந்த போட்டி நடைபெற்றிருந்தது
இன்றைய நிகழ்வின் போது
நேர்மை கலாசாரத்தை அறநெறி பாடசாலை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் மனோகரி உளநல நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிகழ்வுகளும் இங்கு நடை பெற்றன
நிறுவன நேர்மையை மேம்படுத்தல், நிதி, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப நேர்மை, ஆன்மீக, தார்மீக மற்றும் சமூக நேர்மை, உள்கட்டமைப்பு மற்றும் சேவை வழங்கல் நேர்மை மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மை ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு யூலை 27 தொடக்கம் யூலை 31ம் திகதி வரை இந்த நேர்மை வார நிகழ்வுகள் நடைபெறுகின்றன.






