அஸ்வெசும பயனாளிகளுக்கு அதிர்ச்சித் தகவல்: 2027க்குள் 4 லட்சம் குடும்பங்களை நீக்க அரசு முடிவு!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கைக்கு அமைய, ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டிற்குள் மேலும் 400,000 குடும்பங்கள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி முடிவு அஸ்வெசும கொடுப்பனவை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய குடும்பங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. IMF நிபந்தனையும் அரசாங்கத்தின் திட்டமும்: இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும்








