ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள பாரிய நிலச்சரிவு காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்:
வீதிக்கு குறுக்காக மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளமையினால், மலையகத்திற்கான போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. தற்போது வீதியிலுள்ள தடைகளை அகற்றும் பணிகள் அவசரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால், நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளுக்கு பயணிக்கும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Views: 151




