இலங்கையில் விஸ்வரூபம் எடுக்கும் டெங்கு: தினசரி பாதிப்பு 1,000 ஆக உயர்வு! மேல் மாகாணம் கடும் பாதிப்பு
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவிச் செயலாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க எச்சரித்துள்ளார். ஹிரு தொலைக்காட்சியின் ‘பலய’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இந்த அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார். நோயாளர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு தென்மேற்கு பருவமழை காரணமாக மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு பரவல் அதிகரிக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது. அதன்படியே தற்போது பாதிப்புகள் கணிசமாக உயர்ந்துள்ளன. அதிகம் […]







