• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மட்டக்களப்பு – வந்தாறுமூலை அருள்மிகு நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தின் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நடும் பக்திபூர்வ நிகழ்வு 02.07.2026. அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு – வந்தாறுமூலை அருள்மிகு நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தின் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நடும் பக்திபூர்வ நிகழ்வு 02.07.2026. அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

முதலில் கணபதி ஹோமம், வாஸ்து பூஜை மற்றும் சங்குஸ்தாபனம் ஆகிய பூர்வாங்க வழிபாடுகள் முதலில் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, இராஜகோபுர பூமி பூஜை நடத்தப்பட்டு, பஞ்சபூதங்களின் ஆசிகளை வேண்டி புனித நீர், நவதானியங்கள் மற்றும் அடிக்கற்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சுப முகூர்த்த வேளையில் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.

​இந் நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் த. பிரபாகரன், குருமார்கள், ஆலய நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share the Post: