சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (03) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் முக்கிய அம்சங்கள்: தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், ஈழத் தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் அவரைத் தலைமைச் செயலகத்தில் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.










