• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வீதி ஒழுங்கு நடவடிக்கைகளின் போது புதர்களுக்குள் மறைந்திருக்க வேண்டாம்: போக்குவரத்து பொலிஸாருக்கு DIG அதிரடி உத்தரவு!

வீதி ஒழுங்கு நடவடிக்கைகளின் போது புதர்களுக்குள் மறைந்திருக்க வேண்டாம்: போக்குவரத்து பொலிஸாருக்கு DIG அதிரடி உத்தரவு!

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களைச் சோதனையிடுவதற்காக நிறுத்தும்போது, புதர்களுக்குள் அல்லது அதுபோன்ற மறைவான இடங்களில் ஒளிந்திருக்க வேண்டாம் என பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வாகனங்களை நிறுத்த வேண்டிய அவசியமும் சோதனையிட வேண்டிய தேவையும் ஏற்படும் போது, வீதியைப் பயன்படுத்தும் ஏனைய நபர்களுக்கும் தெளிவாகத் தெரியும் வகையில் திறந்தவெளிகளிலேயே அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பொலிஸார் வீதியோரங்களில் கடமையாற்றும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் நடத்தைகள் குறித்து ஏற்கனவே உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகள் மூலம் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதிப் பொலிஸ் மா அதிபர், அவற்றை அனைத்து அதிகாரிகளும் தவறாது பின்பற்ற வேண்டும் என்றும் நினைவூட்டியுள்ளார்.

Share the Post: