ஹஸ்பர் ஏ.எச்-
முன் பிள்ளை பருவ அபிவிருத்தி மற்றும் பராமரிப்புக்கான தேசிய வாரம் நாடளாவிய ரீதியில் ஜூலை 14 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகின்றது.
இவ்வருட தேசிய வாரத்தின் கருப்பொருளாக “வியத்தகு சிறுவர் உலகிற்கு ஒளிவிளக்காகும் அன்பான குடும்பம் “என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது.
அதன் இரண்டாம் நாளுக்குரிய நிகழ்ச்சியான பாலர் பாடசாலை மாணவர்களுக்குரிய நிகழ்ச்சி மகளிர் மட்டும் சிறுவர் அலுவலர்கள் அமைச்சின் முன் பிள்ளை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன் பிள்ளை பருவ மாவட்ட இணைப்பாளர் கே.நப்ரத் அவர்களின் ஒருங்கிணைப்புடன் திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் (16) அன்று மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.சுதாகரன் அவர்கள் விசேட அதிதியாகவும் வளவாளராகவும் கலந்து சிறப்பித்ததோடு மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு இணைப்பாளர் ஏ.எல். ரபிஸ் மற்றும் சிறுவர் பாதுகாப்பு மாவட்ட இணைப்பாளர் ரியால் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மொழிபெயர்ப்பாளராக மூதூர் பிரதேச செயலகத்தின் முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எப். சஸ்னா அவர்கள் கலந்து கொண்டதோடு திருகோணமலை மாவட்ட அனைத்து பிரதேச செயலகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்து முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் வெளிக்கல உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வில் Success பாலர் பாடசாலை மற்றும் நனபகன பாலர் பாடசாலை ஜன விஜய பாலர் பாடசாலை Blossoming பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அப்பாடசாலையின் ஆசிரியைகள் கலந்து கொண்டதோடு சிறுவர் நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டு குறித்த சிறுவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.







