• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கடும் வறட்சியால் கந்தளாயில் காட்டு யானைகளும் பறவைகளும் திரளாகக் காணப்படுகின்றன

கடும் வறட்சியால் கந்தளாயில் காட்டு யானைகளும் பறவைகளும் திரளாகக் காணப்படுகின்றன

திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியினால் சிறிய நீர்நிலைகள் மற்றும் குளங்கள் வறண்டுபோயுள்ள நிலையில், தண்ணீரைத் தேடி காட்டு யானைகள் கூட்டமாகக் குடியிருப்பு பகுதிகளுக்கு அண்மையில் வரத் தொடங்கியுள்ளன.

கந்தளாய் பிரதேசத்தின் ஜயந்திபுரம் மற்றும் சூரியபுரம் பகுதிகளில் அண்மைய நாட்களில் பல காட்டு யானைகள் கூட்டமாகக் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கந்தளாய் – சேருவில பிரதான வீதியின் சித்தாறு பகுதியில் இலட்சக்கணக்கான  பறவைகள் திரண்டுள்ளமை இயற்கை ஆர்வலர்களையும் பொதுமக்களையும் கவர்ந்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தை பாதித்துள்ள கடும் வறட்சி காரணமாக நீர்நிலைகள் வற்றிவருவதால், வனவிலங்குகள் மற்றும் பறவைகள் நீர் மற்றும் உணவு தேடி இடம்பெயர்ந்து வருகின்றன எனக் கருதப்படுகிறது.

Share the Post: