• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மூதூரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பிரமாண்ட ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை!

மூதூரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பிரமாண்ட ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை!

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாக வரலாற்றை நினைவு கூரும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, திருகோணமலை – மூதூர் பகுதியில் விசேட திடல் தொழுகை இன்று வியாழக்கிழமை (28) காலை மிக விமர்சையாக நடைபெற்றது.

மூதூர் அல் ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையத்தின் (Al Hasanah Social Development Centre) ஏற்பாட்டில், மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இத்திடல் தொழுகை காலை 6.30 மணிக்கு ஆரம்பமானது.

பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என மூதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் மிகவும் பக்திப் பெருக்குடன் இந்தத் திடல் தொழுகையிலும், அதனைத் தொடர்ந்த பெருநாள் பிரசங்கத்திலும் (குத்பா) கலந்துகொண்டனர்.

தொழுகையின் நிறைவில், நாடளாவிய ரீதியிலும் உலகளவிலும் அமைதி, சமாதானம் மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டி விசேட துஆப் பிரார்த்தனை நிருவஹிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தொழுகையில் கலந்துகொண்ட மக்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி, முகமன் கூறித் தங்களது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர். அத்துடன், உறவினர்கள் மற்றும் வறியவர்களுக்கு உழ்ஹிய்யா (குர்பானி) இறைச்சிகளைப் பகிர்ந்து வழங்கி, தியாகப் பெருநாளை மக்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

Share the Post: