முச்சக்கர வண்டி வயலுக்குள் குடை சாய்ந்ததில் வயோதிபப் பெண் பலி

திருகோணமல தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 96ம் கட்டை பகுதியில் முச்சக்கரவண்டி வயலுக்குள் குடை சாய்ந்ததில் வயோதிப பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் (29) இடம் பெற்றுள்ளது 

இதில் வயது (67)உடைய 99ம் கட்டையை சேர்ந்த வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

99ம் கட்டையில் இருந்து 10ம் கொலனிக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர் இதில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் பயணித்துள்ளனர்.முச்சக்கர வண்டி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வருகிறது.

இதன் போது சாரதி உட்பட இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share the Post: