வெளியான க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயம் முதலிடம் பெற்றமைக்காக இன்று திங்கட்கிழமை (22) விசேட பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.
பிறைந்துரைச்சேனை கல்விச் சமூகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அறபா நகர் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலய அதிபர் மௌலவி ஏ.யூ.எம்.நளீம் ஸலாமி தலைமையில் இடம்பெற்றது.
இதில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர், காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.மர்சூக், பாடசாலை இ.பி.எஸ்.ஐ.இணைப்பாளர் எம்.பி.எம்.சித்தீக், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.





Views: 94




