பாதுகாப்பு படை வீரர் அதிகாரிகள் கலந்து கொண்ட வெசாக் தன்சல நிகழ்வு

வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இனங்களிடையே ஐக்கியத்தினையும் சகவாழ்வின் அவசியத்தினையும் ஏற்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண விற்பனை முகாமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் வெசாக் விழா அரசடியில் நடாத்தப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் மதங்கள்,இனங்களிடையேயான ஐக்கியத்தினை ஏற்படுத்துவதன் அவசியத்தினை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அதிதிகளாக மாவட்டத்தில் பணியாற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த முப்படை அதிகாரிகள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் கலந்துகொண்டவர்களுக்கு தாசாந்திக்காக குளிர்பானமும் பிஸ்கட்டுகளும் இங்கு வழங்கி வைக்கப்பட்டன

Share the Post: