vadivel shagthivel
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் சி.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், வலயக் கல்வி அலுவலகத்தின் இ.பி.எஸ்.ஐ இணைப்பாளர் எஸ்.பத்மராஜா, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருற்தனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற ஏழு மாணவர்கள் மற்றும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் இதன்போர் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
மாணவர்கள் பிறக்கும்போதே பல்வேறு திறமைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களின் திறமைகளை வளர்த்தெடுப்பதில் அவர்கள் வாழும் சூழல் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதன் மூலம் ஆளுமையும் திறமையும் மிக்க மாணவர்களை உருவாக்க முடியும் என இன்போது பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தெரிவித்தார்.





