A.H.HASFAR HASFAR
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பகுதியில் பெய்த கனமழையுடன் வீசிய கடும் காற்றின் காரணமாக முள்ளியடி பகுதியில் உள்ள வீடொன்று (22) சேதமடைந்துள்ளது.
தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், குறித்த வீட்டுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் உள்ள ஒரு பகுதி உடைந்து காணப்படுகிறது. கனமழை உடனான கடும் காற்றின் வேகம் அதிகரித்ததால் குறித்த சேதம் ஏற்பட்டுள்ளது என தெரிகிறது.
குறித்த சேத விபரம் தொடர்பில் தம்பலாகாமம் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: 6




