• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • ஞானசாரதேரரின் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாக பயன்படுத்தக் கூடாது – சிறிநேசன் எம்.பி

ஞானசாரதேரரின் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாக பயன்படுத்தக் கூடாது – சிறிநேசன் எம்.பி

vadivel shagthivel

ஞானசாரதேரர் விடையத்தில் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கௌரமாக ஏற்றுக் கொள்கின்றோம் இதனை எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாக பயன்படுத்தக் கூடாது.  என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்தவர் என்ற அடிப்படையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை வெளியிட்டவர் என்ற அடிப்படையிலும் அவருக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. இப்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அமைவாக அவர் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றார்

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திக்கும் போதே அவர்தான் போது தெரிவித்தார் இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்

நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதை நாங்கள் வரவேற்கின்றோம் அந்த அடிப்படையில் ஞானசாரர் விடயத்தில் எதிர்க்கட்சியினர் நிறைவேற்றதுறையினர் இதில் தலையீடு செய்து உடனடியாக ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என கூறுகின்றார்கள்.

நீதி மன்றத்தை அவமதித்த ஒருவரை முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சினைகளை உருவாக்கிய ஒருவரை இவ்வாறு விடுதலை செய்து கொண்டிருந்தால் தொடர்ந்தும் இந்த நாட்டில் இனவாதம் என்பது தலைவிரித்து ஆடுகின்ற ஒரு நிலைமை காணப்படும். ஆகவே எம்மை பொறுத்தவரையில் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கௌரமாக ஏற்றுக் கொள்கின்றோம் இதனை எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாக பயன்படுத்தக் கூடாது.

சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்துவதற்காக இந்த அரசாங்கம் அவர்களுக்கு சாதகமான செயற்பாடுகளை செய்கின்றது பெரும்பான்மை இன மக்களை துன்புறுத்துகின்றது. என்ற அடிப்படையில் நாம் கௌரவமாக பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல அவர்கள் கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார் இந்த கருத்தை நாம் நிச்சயமாக அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை

நீங்கள் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சிறுபான்மை மக்களை சீண்டக்கூடிய விதத்தில் கருத்துக்களை வெளியிடக்கூடாது

கண்டி தேசிய அசம்பிளியாக இருக்கின்ற நாங்கள் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு சமஸ்டி தீர்வை தருவதற்கு தயாராக இருந்தவர்கள் அக்காலத்திலிருந்த தமிழ்; அரசியல்வாதிகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற அடிப்படையில் கருத்து எம்மிடம: முன்னர் தெரிவித்த லக்ஷ்மன் கிரியில அவர்கள் இப்போது சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தக் கூடிய அளவிற்கு தற்போதைய அரசாங்கம் பிக்குமார்களை கைது செய்கின்றது என கூறுவது ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி கூறிய கருத்து அல்ல

எனவே இந்தக் கருத்தை லக்ஷ்மன் கிரியல்லா அவர்கள் கூறியிருந்தால் கருத்தை நிராகரித்து கருத்துக்களை வெளியிட வேண்டும். தற்போதைய நிலையில் இநந்த அரசாங்கம் மதவாதத்திற்கு எதிராக எடுக்கின்ற செயற்பாடுகளை நாங்கள் வரவேற்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்களின் பிரச்சினைகள் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கின்றது இரண்டு இலெட்சத்துக்கு மேற்பட்ட கால்நடைகளைக் கொண்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை; செய்து கொண்டிருக்கின்றார்கள் அந்த அடிப்படையில் இப்போது வேளலாண்மை செய்ய வேண்டிய காலம் வந்திருக்கின்றது ஆரம்பக் கூட்டத் தீர்மானத்தின் அடிப்படையில் கால்நடைகள் எல்லாம் வயல் நிலங்களில் இருந்து அகற்றப்பட்டு மயிலத்தமடு,மாதவனை போன்ற மேச்தல் தரைப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டுதான் அவை பராமரிக்கப்படுகின்றன.

இது பல தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன எனினும் பண்ணையாளர்கள் ஆயிரம் நாட்கள் கடந்தும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். கால்நடைகளை வழக்கமாக தாங்கள் பராமரித்து வருகின்ற மயிலத்தமடு மாதவனை பிரதேசங்களில் கொண்டு பராமரிப்பதற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கின்றபோது அம்பாறை மற்றும் பொலன்நறுவை மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் சட்டவிரோதமாக அப்பிரதேசத்தில் புற்றரைகளை அழிப்பதோடு மட்டுமல்லாமல் காடுகளையும் அழித்துக் கொண்டு பயிற்செய்கையாளர்கள் என்ற போர்வையில் கால்நடைகளை அழிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அண்மையில் கால்நடைளுக்கு துவக்குகளால்கூட சுடப்பட்டு இருக்கின்றன. ஆகவே இந்த அரசாங்க காலத்தில் ஒரு இன முறைகளை ஏற்படுத்துவதற்காக சில சக்திகள் செயற்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த விடயம் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அமைச்சர் சுனில்ஹந்து நெத்தியிடமும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சட்டவிரோதமான முறையில் கால்நடை வளர்ப்பாளர்களை இடையூறு தெரிவிக்கக் கூடிய விதத்தில் செயல்படுகின்ற அந்த சட்ட விரோத செயற்பாட்டல்களை வெளியேற்றும்படி ஏராவூர் நீதிமன்றத்திலும் தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கின்றது. கொழும்பு நீதிமன்றத்திலும் விடயம் தொடர்பில் வழக்கு தொடர்ந்தபோது சட்ட விரோதமாக செயல்படுபவர்களை வெளியேற்றி விடுவதாக அங்கும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மகாவலி அபிரித்தி அதிகார சபை, வன ஜீவராசிகள் திணைக்களம், வனவள திணைக்களம் போன்றவை இந்த விடயத்தில் பாரபட்சமாக நடந்து கொள்ளுகின்ற செயற்பாட்டை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. கால்நடை வளர்ப்பு சீண்டி விளையாடுகின்ற அல்லது குழப்பத்தை உருவாக்குகின்ற செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே இன முறுகளை ஏற்படுத்தாமல் எமது மாவட்டத்தில் நாங்கள் எமது கால்நடைகளை பராமரிப்பதற்குரிய வேலைப்பாடுகளை மேற்கொள்வதற்கு உரிய செயற்பாடுகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் இந்த அரசாங்கம் எங்களுக்கு தவறு இழைக்கமாக இருந்தால் நாங்கள் இந்த அரசாங்கத்திடம் இருந்தும் முழுமையாக நம்பிக்கையை இழக்க வேண்டிய நிலைமைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்.

எனவே பாராளுமன்றம் நிறைவேற்றுத்துறை, நீதிமன்றம் போன்ற துறைகளை நாடுகின்றோம்.  எனக்கு தீர்வு கிடைக்காமல் விட்டால் நாம் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பதை பற்றி நாங்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நிலைமைக்கு இந்த அரசாங்கம் நடந்து கொள்ளக்கூடாது. என அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Share the Post: