October 23, 2026

 உயிருக்குப் போராடும் யானை: தொடரும் அவசர மருத்துவச் சிகிச்சைகள்சிகிச்சைக்கான கூடாரம் மற்றும் கனரக வாகன வசதிகள் உடனடியாய் ஏற்பாடு

பாறுக் ஷிஹான் வயல் பகுதியில் உயிருக்குப் போராடி வரும் காட்டு யானையைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு மருத்துவப் பிரிவினரால் தீவிர மருத்துவச் சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை  பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  சேகப்பற்று பகுதியிலுள்ள வயல் பகுதியில் கடந்த புதன்கிழமை(21)   15 வயது மதிக்கத்தக்க காட்டு யானை சுகயீனமற்ற நிலையில் மீட்கப்பட்டிருந்தது. மேலும்  வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வளத்தாப்பிட்டி களப் பாதுகாப்புப் படைப் பிரிவு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி எம்.ஜி. அஜித் குணரத்ன

 உயிருக்குப் போராடும் யானை: தொடரும் அவசர மருத்துவச் சிகிச்சைகள்சிகிச்சைக்கான கூடாரம் மற்றும் கனரக வாகன வசதிகள் உடனடியாய் ஏற்பாடு Read More »

திருகோணமலையில் பாலின அடிப்படையிலான குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.

ஹஸ்பர் ஏ எச் – தற்போது அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதுடன், கல்வி, சுகாதாரம் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகிப்பதற்கும், முன்னேற்றம் அடைவதற்கும் ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைப் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தெரிவித்தார். எனினும், வெளிப்படையாகப் பார்க்கும்போது பெண்களின் முன்னேற்றம் சிறப்பாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் பல்வேறு துயரமான சம்பவங்கள் மறைந்திருப்பதாகவும், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான

திருகோணமலையில் பாலின அடிப்படையிலான குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு. Read More »

இந்திய நிதியுதவியுடன் காலி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 22ஆவது மாதிரிக் கிராமம் பயனாளிகளிடம் கையளிப்பு

ஹஸ்பர் ஏ எச்  இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையின் காலி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘திதுல’ மாதிரிக் கிராமத்தில் உள்ள 24 வீடுகள், 2026 ஒக்டோபர் 22ஆம் திகதி பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்  கலாநிதி எச். எம். சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து வீடுகளைத் திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தனர். 2இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், இலங்கையின் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சுடன்

இந்திய நிதியுதவியுடன் காலி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 22ஆவது மாதிரிக் கிராமம் பயனாளிகளிடம் கையளிப்பு Read More »

திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

vadivel shagthivel மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் சி.பிரதீபன் தலைமையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், வலயக் கல்வி அலுவலகத்தின் இ.பி.எஸ்.ஐ இணைப்பாளர் எஸ்.பத்மராஜா, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருற்தனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற ஏழு மாணவர்கள் மற்றும்

திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு Read More »

தம்பலகாமம் பகுதியில் கனமழையுடன் வீசிய கடும் காற்றினால் வீடு சேதம்!

A.H.HASFAR HASFAR திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பகுதியில் பெய்த கனமழையுடன் வீசிய கடும் காற்றின் காரணமாக முள்ளியடி பகுதியில் உள்ள வீடொன்று (22) சேதமடைந்துள்ளது. தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், குறித்த வீட்டுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த வீட்டில் உள்ள ஒரு பகுதி உடைந்து காணப்படுகிறது. கனமழை உடனான கடும் காற்றின் வேகம் அதிகரித்ததால் குறித்த சேதம் ஏற்பட்டுள்ளது என தெரிகிறது. குறித்த சேத விபரம் தொடர்பில் தம்பலாகாமம் பிரதேச

தம்பலகாமம் பகுதியில் கனமழையுடன் வீசிய கடும் காற்றினால் வீடு சேதம்! Read More »

ஞானசாரதேரரின் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாக பயன்படுத்தக் கூடாது – சிறிநேசன் எம்.பி

vadivel shagthivel ஞானசாரதேரர் விடையத்தில் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கௌரமாக ஏற்றுக் கொள்கின்றோம் இதனை எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாக பயன்படுத்தக் கூடாது.  என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்தவர் என்ற அடிப்படையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை வெளியிட்டவர் என்ற அடிப்படையிலும் அவருக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. இப்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அமைவாக அவர் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றார் மட்டக்களப்பு செட்டிபாளையத்தில்

ஞானசாரதேரரின் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாக பயன்படுத்தக் கூடாது – சிறிநேசன் எம்.பி Read More »

துவிச்சக்கர வண்டியில் இலங்கையின் கரையோரத்தைச் சுற்றிவலம் வரும் முதியோரைவரவேற்கும் நிகழ்வு

vadivel shagthivelஇலங்கையின் கரையோர பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் 31 நாட்களை இலக்காகக் கொண்டு துவிச்சக்கர வண்டிப் பயணத்தை மேற்கொண்டு வரும் முதியோர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வானது  மட்டக்களப்பு மாவட்டம் முண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரின் வழிகாட்டலில், நிருவாக உத்தியோகத்தர் கே.கருணாநிதியின் தலைமையில், முதியோர் அபிவிருத்தி உத்தியோகத்தர் வே.பத்மினியின் ஒழுங்குபடுத்தலில்   பிரதேச  செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய முதியோர் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வுப் பேரணியானது, இலங்கையில் முதியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும்,

துவிச்சக்கர வண்டியில் இலங்கையின் கரையோரத்தைச் சுற்றிவலம் வரும் முதியோரைவரவேற்கும் நிகழ்வு Read More »

திருகோணமலையில் தந்தையை பொல்லால் அடித்து கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை வழங்கி மேல் நீதிமன்றம் தீர்ப்பளிப்பு —

(கனகராசா சரவணன்) திருகோணமலையில் தனது தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த 35 வயதுடைய மகனான கைலாசப்பிள்ளை வினோதரன் என்பவருக்கு வியாழக்கிழமை (22) திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். கடந்த 2022 ஏப்பிரல் 17 ந் திகதி பாலத்தடிச்சேனை, தோப்பூர்  பிரதேசத்தில் மது போதையில் இருந்த அவரது கை.வினோதரன்   தனது தந்தையான  59 வயதுடைய முருகுப்பிள்ளை கைலாசப்பிள்ளை  என்பவரை பொல்லால் அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

திருகோணமலையில் தந்தையை பொல்லால் அடித்து கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை வழங்கி மேல் நீதிமன்றம் தீர்ப்பளிப்பு — Read More »