திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில், மூதூர் அமினா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று (30) காலை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தொன்றில் மூவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
மார்க்கத்தில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரே சிறு காயங்களுக்குள்ளான நிலையில், அவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் காரணமாக முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Views: 119




