ஹஸ்பர் ஏ எச்
தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சாஹித்திய விழா (29) முள்ளிப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே. சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ .ஜி .எம். ஹேமந்த குமார, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி),ஜெ.சிறீபதி , கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மேனகா புவிக்குமார் மற்றும் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், தம்பலாகாமம் பிரதேச சபை தவிசாளர் எச் தாலிப் அலி,உப தவிசாளர் வி.விஜயகுமார் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலக்கியம், கலை, கலாசாரம் மற்றும் மொழி சார்ந்த பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்துவதையும், மக்களிடையே இலக்கிய ஆர்வத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன் போது மூவின சமூகத்தை சேர்ந்த கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இந்நிகழ்வில் இலக்கியம் மற்றும் கலைத்துறைகளுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பிரதேசத்தின் கலை, கலாசாரப் பாரம்பரியங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கம், படைப்பாற்றல், இலக்கிய ஈடுபாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கும் இவ்வாறான இலக்கிய விழாக்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
தம்பலகாமம் பிரதேசத்தின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, கலை இலக்கியத் துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.
தம்பலகாமம் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழா, பிரதேசத்தின் இலக்கிய மற்றும் கலாசார வளர்ச்சியை முன்னெடுக்கும் முயற்சிகளில் ஒன்றாகக் குறிப்பிடத்தக்கது.






