• Home
  • உள்ளூர் செய்திகள்
  • தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ரூ. 1.5 கோடி மதிப்பிலான இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வரலாற்றுச் சாதனை!

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ரூ. 1.5 கோடி மதிப்பிலான இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வரலாற்றுச் சாதனை!

கொழும்பு, வெள்ளவத்தை மிராஜ் ஹோட்டலில் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், நாட்டின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு இலவசமாக இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) கோலாகலமாக நடைபெற்றது.

இலங்கை ஊடக வரலாற்றில் ஒரே நேரத்தில் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள அதிகளவான தமிழ் மொழி பேசும் ஊடகவியலாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்ட முதல் நிகழ்வாக இது அமைந்துள்ளது.

லண்டனின் பிரபல தொழிலதிபரும் சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸின் சுமார் 1.5 கோடி ரூபா நிதி அனுசரணையில், 65 ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகளும் (Laptops), 25 ஊடகவியலாளர்களுக்கு அதிநவீன கைபேசிகளும் (Smartphones) என மொத்தம் 90 ஊடகவியலாளர்களுக்கு இவ்வுபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய பிரதம விருந்தினர் சீவரட்ணம் முறேஸ், தனது சிறுவயது வறுமை அனுபவங்களையும், கஷ்டங்களுக்கு மத்தியில் தன்னை வளர்த்தெடுத்த தாயாரின் தியாகங்களையும் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.செந்தில்நாதன், மூத்த ஊடகவியலாளரும் ‘முரசு’ பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.வித்தியாதரன், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.வீரசுதன், முன்னாள் பிரதம ஆசிரியர்கள் மற்றும் மூத்த ஊடகவியலாளர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.

இத்திட்டம் பிராந்திய மற்றும் தமிழ் ஊடகவியலாளர்களின் தொழில்முறைச் செயற்பாடுகளுக்கு பெரும் பக்கபலமாக அமையும் என ஊடக சமூகத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Share the Post: